Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பீர்" குடிப்பதற்காக செல்போன் பறித்த சிறுவன்..கை-காலை இழந்த பயணி..சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே சோகம்

ரயிலில் சென்ற பயணியிடம் தண்டவாளம் அருகே நின்ற 15 வயது சிறுவன் செல்போனை பறித்துள்ளான். இதில் நிலைதடுமாறிய அந்த பயணி ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் அவரது கை, கால் துண்டானது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ரயில் தண்டவாளத்தின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த 15 வயது சிறுவன், அந்த வழியாக வந்த ரயிலில் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த பயணியிடம் இருந்து செல்போனை பறித்துள்ளான். இதில் நிலைதடுமாறிய அந்த பயணி ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்ததில் அவரது கை மற்றும் கால் துண்டாகியுள்ளது.

ரயில்களில் ஜன்னல் ஓரம் அல்லது படிக்கட்டு அருகே அமர்ந்து செல்லும் பயணிகளிடம் செல்போன் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது பயணிகளுக்கு பெரும் பீதியை கொடுத்துள்ளது.

செல்போன் பறிப்பு சம்பவங்கள்

செல்போன் பறிப்பு சம்பவங்கள்

கஞ்சா போதையில் அப்பகுதியில் சுற்றித்திரியும் சமூக விரோதிகள் சிலர், பேசின் பிரிட்ஜ் பகுதியில் ரயில்கள் எப்போதும் மெதுவாக செல்வதை அறிந்து கொண்டு படிக்கட்டுகளில் நின்றபடி செல்போன் பயன்படுத்தும் பயணிகளை குறிவைத்து தாக்குகின்றனர். அதாவது காக்கா முட்டை பட பாணியில் படிக்கட்டுகள் ஓரம் நிற்கும் பயணிகளை கொடூரமாக தாக்கி செல்போன் பறிப்பில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் செல்போனை பறிகொடுப்பதோடு பயணிகள் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு விடுகிறது.

கை, கால் துண்டானது

கை, கால் துண்டானது

கடந்த ஜனவரி மாதம் கூட ரோனி என்ற வட மாநில இளைஞர் செல்போனை பறித்து சென்றவர்களை பிடிக்க முயற்சித்த போது ரயிலில் இருந்து விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த அப்துல் கரீம் என்பவரிடம் 15வயது சிறுவன் செல்போன் பறித்துள்ளான். இந்த சம்பவத்தின் போது நிலை தடுமாறி கீழே விழுந்த அப்துல் கரீம் இடது கை மற்றும் வலது கால் துண்டானது. இந்த கொடூர சம்பவம் குறித்த விவரம் வருமாறு: -

பேசின்பிரிட்ஜ் அருகே சென்றபோது..

பேசின்பிரிட்ஜ் அருகே சென்றபோது..

திருபத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் அப்துல் கரீம் (வயது 40). செல்போன் கடை நடத்தி வரும் அப்துல் கரீம் செல்போன் உதிரி பாகங்கள் வாங்குவதற்காக சென்னை வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன் தினம் சென்னை செண்டிரலில் இருந்து ஜோலோர்பேட்டை செல்லும் ரயிலில் தனது ஊருக்கு திரும்பி கொண்டிருந்து இருக்கிறார். இந்த ரயில் பேசின்பிரிட்ஜ் அருகே சென்ற போது வழக்கம் போல் மெதுவாக சென்றுள்ளது.

செல்போனை பறித்த சிறுவன்

செல்போனை பறித்த சிறுவன்

ரயிலின் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த அப்துல் கரீம் செல்போனை பயன்படுத்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது, தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த 15 வயது சிறுவன், அப்துல் கரீம் கையில் இருந்த செல்போனை பிடுங்கிக் கொண்டு ஓடியுள்ளான். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அப்துல் கரீமின் இடது கை மற்றும் வலது கால் துண்டானது. இதைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த ரயில்வே போலீசார் அப்துல் கரீமை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 பீர் குடிப்பதற்காக செல்போன் பறித்துள்ளான்

பீர் குடிப்பதற்காக செல்போன் பறித்துள்ளான்

அப்து கரீமிடம் செல்போன் பறித்த சிறுவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த 15-வயது சிறுவன் செண்டிரல் ரயில் நிலையத்தில் போலீசாரிடம் சிக்கினான். பீர் குடிப்பதற்காக செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன், அந்த செல்போனை சென்னை பாரிமுனையில் ரூ.1,700 க்கும் விற்றதும் தெரியவந்தது. பேசின் பிரிட்ஜ் பகுதியில் அடிக்கடி இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடப்பதும் இதனால், பயணிகளின் விலை மதிக்க உயிர்கள் பறிபோகும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருவதாக குற்றம் சாட்டும் பயணிகள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+