பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகத் திட்டம்.. மீனவர்கள் எதிர்ப்பால்.. கைவிட விஜய் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா கடற்கரை அருகில் உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கும் அரசுத் திட்டத்திற்கு எதிராகத் தீவிரமான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்த நவீன வளாகத்தைக் கட்டுவதற்காக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு எதிராக மீனவக் குடும்பங்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பட்டினப்பாக்கம் மற்றும் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 26 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்து புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலேய அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தி உருவாகியுள்ளது.

Pattinapakkam

நோச்சிக்குப்பம் உள்பட ஒன்பதுக்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் மீனவப் பஞ்சாயத்து பிரதிநிதிகள் இதற்கு எதிராகத் தீவிரமாகக் குரல் கொடுத்து வருகின்றனர். தங்களது பாரம்பரியமான வாழ்வாதாரம், கடலுக்குச் செல்லும் வழிகள், வலைகளைப் பழுது பார்க்கும் இடங்கள் மற்றும் மீன் விற்கும் பகுதிகள் இந்தத் திட்டத்தால் முழுமையாகப் பாதிக்கப்படும் என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தங்களை வேறு பகுதிகளுக்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றக்கூடும் என்ற அச்சமும் மீனவர்களிடம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடற்கரைப் பகுதியில் ஒன்று திரண்ட மீனவர்கள் மாபெரும் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, அரசு உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட கெடுவுக்குள் அரசாணை ரத்து செய்யப்படவில்லை என்றால் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் களத்தில் இறங்கியுள்ளன. குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மீனவர்களுடன் இணைந்து பட்டினப்பாக்கம் பகுதியில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. நோச்சிக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், பெண்களும் இந்தச் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பெருமளவில் கலந்துகொண்டனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பகுதியில் பிரம்மாண்டமான 15 மாடி கட்டடத்தைக் கட்டுவது சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக, இந்தச் கடற்கரைப் பகுதி ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் ஒரு முக்கியமான இடம் என்பதால், இங்கு கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது இயற்கைக்கு விரோதமானது என்று அவர்கள் வாதிடுகின்றனர். மேலும், சாந்தோம் மற்றும் லூப் ரோடு பகுதிகளில் ஏற்கனவே இருக்கும் கடும் போக்குவரத்து நெரிசல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மக்களின் இந்தத் தொடர் எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் குறித்து உளவுத்துறை மூலமாக அரசுக்குத் தீவிரமான எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீனவ சமுதாயத்தினரிடமிருந்து இவ்வளவு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்புவது மற்றும் பல்வேறு கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிப்பது அரசுக்குச் சவாலாக மாறும் என்பதால், இந்தத் திட்டத்தை இந்த இடத்தில் நடைமுறைப்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கக்கூடும் அல்லது வேறு மாற்று இடத்தைத் தேர்வு செய்வது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் அரசு உரிய முடிவை விரைவில் அறிவிக்கும் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+