இன்று போகி பண்டிகை கொண்டாட்டம்.. பழைய பொருட்களை எரித்த மக்கள்! புகைமூட்டத்தால் மறைந்த சாலைகள்
சென்னை: ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். புதியன புகுதலும், பழையன கழிதலும் என்ற அடிப்படையில் வீட்டில் இருக்கு பழைய பொருட்கள், ஆடைகளை போகி பண்டிகை அன்று அதிகாலை பொதுமக்கள் வீதியில் போட்டு எரிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் இன்று தமிழ் மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் கொண்டாட்டத்திற்காக தமிழ்நாடு மக்கள் தயாராகி வரும் நிலையில் இன்று போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர்.
புதியன புகுதலும், பழையன கழிதலுமே போகி என்ற அடிப்படையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

போகி பண்டிகை
அதிகாலை 12 மணி முதல் வீட்டில் இருந்த பழைய பாய், தலையணை, ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை பொதுமக்கள் வீதியில் வைத்து எரித்து வருகிறார்கள். இதனால் பல வீதிகளின் வீட்டு வாசல்களில் எரிந்த பொருட்கள் குவியல் குவியலாக காணப்படுகிறது. இதனால் சில பகுதிகளில் புகை மூட்டமாக காணப்படுகிறது.

இயற்கையான பொருட்கள்
ஒரு காலத்தில் போகி பண்டிகையின்போது முன்னோர்கள் இயற்கையான பொருட்களையே தீ வைத்து எரித்து வந்து இருக்கின்றனர். இதனால் புகை மூட்டம் காணப்பட்டாலும், பெரிய அளவில் உடல்நல பாதிப்புகள் ஏற்படாது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இயற்கையான பொருட்களை எரிக்கவே எதிர்ப்பு தெரிவித்து அதை ஏழை மக்களுக்கு வழங்க அறிவுறுத்தி வருகின்றனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் எரிப்பு
ஆனால், தற்போது அனைத்தும் பிளாஸ்டிக், செயற்கை பொருட்களாக மாறிவிட்ட நிலையில் அதை போகி பண்டிகையின்போது பொதுமக்கள் எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. குறிப்பாக பாலிஸ்டர் துணிகள், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள், டியூபுகள், பைப்புகள், டயர்கள், ரசாயண பேட்டரிகள் போன்றவற்றையும் எரிக்கின்றனர்.

காற்று மாசு
இதன் காரணமாக காற்று மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் கரும்புகை ஏற்பட்டு பல பகுதிகளில் பனிமூட்டத்துடன் புகை மூட்டம் கலந்து சாலையில் எதிரில் வரும் எதுவும் தெரியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வெளியாகும் நச்சு காற்றால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு, கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

மாசில்லா போகி
குறிப்பாக சென்னை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் இதனால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். விபத்துகள் முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்டு உள்ளன. இந்த நிலையில் போகி பண்டிகையை மாசில்லா போகியாக கொண்டாட தமிழ்நாடு அரசு கடந்த 19 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தல்
இதனால் தற்போது பழைய பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை எரிப்பது குறைந்து இருக்கிறது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்று காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதனும் காற்றில்லா போகியை கொண்டாட அறிவுறுத்தி இருக்கிறார். சென்னையில் இது தொடர்பாக இந்த ஆண்டு பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. போகி அன்று சென்னையில் ஏற்படும் காற்று மாசை அளவிடுவதற்காக 24 மணி நேரம் காற்று தரத்தை கண்காணிக்க காற்று மாதிரி சேகரித்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications