இயற்கையை காப்பாற்ற எங்களுக்கு வேறு வழி தெரியல... பிளாஸ்டிக் தடை குறித்து உருகிய அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: பிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த அதற்குத் தடை விதிப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று சினிமா பாணியில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத திரைப்படமாக பார்க்கப்படும் படம் மணிரத்னத்தின் நாயகன்.. அதில் ஹீரோவாக நடித்த கமலஹாசன்.. தமது மகளுடன் உரையாடும் காட்சி ஒன்று வரும். வேறு வழி தெரியலடா கண்ணா என்று அவர் பேசும் வசனம் ஏக பிரபலம்.
இணைய வசதி, தகவல் தொடர்பு வசதிகள் அவ்வளவாக அறிமுகமாகாத காலத்தில் இந்த வசனம் பட்டி தொட்டி எல்லாம் மிகவும் பாப்புலர். அதே போன்றதொரு வாக்கியத்தை பேசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
தமிழகத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த சில மாதங்களாக தமிழக அரசு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் தயாராகி வருகிறது.

வேறு வழி தெரியவில்லை
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், பிளாஸ்டிக் மாசை கட்டுப்படுத்த அதற்குத் தடை விதிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று பேட்டியளித்தார். அப்போது அவர் மேலும் கூறியதாவது:

இறக்கும் மீன்கள்
நமது கடற்கரைகளில் ஏராளமான பெரிய மீன்கள், இறந்து கரை ஒதுங்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அந்த மீன்களின் வயிற்றில் இருந்து கிலோ கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் எடுக்கப்படுகின்றன.அதற்கு மட்டுமல்ல, நிலத்தடி நீரும் உயருவதற்கு பிளாஸ்டிக் பெரும் தடையாக உள்ளது.

பிரச்னைகள் தொடர்கின்றன
பிளாஸ்டிக்கால் பல பிரச்னைகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. எங்களுக்கு அதை தடை செய்வதைத் தவிர, வேறு வழியே தெரியவில்லை. இயற்கையை காப்பாற்ற வேண்டிய சூழலில் நாங்கள் இருக்கிறோம் 14 வகையான பொருட்களுக்கு தான் அரசு தடை செய்துள்ளது.

தடை விதித்த நீதிமன்றம்
மற்ற பொருட்களை எல்லாம் வழக்கம் போல பயன்படுத்தலாம். ஆனாலும், உயர் நீதிமன்றம் எல்லா பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சொல்கிறது. மக்களும், பிளாஸ்டிக் தடையை வெற்றிகரமாக்க ஒத்துழைப்புத் தர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு உரிய மாற்று வழிகள் குறித்து அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்' என்று கூறியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications