கொடநாடு கொலை பற்றி சட்டசபையில் விவாதிப்பது விதிமீறலா? - பீட்டர் அல்போன்ஸ் சொல்வதென்ன
: மரபை மீறி கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா? என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமாருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பதிலளித்துள்ளார்.
சென்னை: நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது கொடநாடு கொலை வழக்கு பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று அதிமுக ஜெயகுமார் சொல்வது தவறு என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார். சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது இதைபோன்ற பரபரப்பான,பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைபற்றி விவாதிக்கத்தான் விதி எண்55 உள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
கடந்த 2017ஆம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை கொள்ளை விவகாரம் குறித்து மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதில் தொடர்பு உள்ளதாக முக்கிய குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபையில் கொடநாடு வழக்கு விவகாரம் கடந்த வாரம் புயலைக்கிளப்பியது. கொடநாடு எஸ்டேட் விவகாரம் குறித்து கூச்சலிட்ட அதிமுகவினர் பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இரண்டு நாட்கள் சட்டசபையை புறக்கணித்தனர்.

மடியில் கனம்
சட்டசபையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணைப் பற்றி விளக்கம் அளித்த முதல்வர் ஸ்டாலின், கொடநாடு விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. அதனால் யாரும் பயப்படத் தேவையில்லை என்றும் கூறினார் முதல்வர். தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே விசாரணை நடைபெறுகிறது. உண்மை நிலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். அதிமுகவினர் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மரபை மீறி பேசுவதா?
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கொடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிக்கின்றனர். நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமோ, சட்டமன்ற அதிகாரத்தை நீதிமன்றமோ கையில் எடுக்க முடியாது. மரபை மீறி கொடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா? என்று கேள்வி எழுப்பினார்.

உரிமை மீறல்
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொடநாடு வழக்கை சட்டப்பேரவையில் விவாதித்தது விதிமீறல். சட்டமன்றத்தில் விவாதிக்க எவ்வளவோ பிரச்னைகள் உள்ளபோது, கொடநாடு விவகாரத்தை பேச வேண்டுமா? உரிமை மீறல் என்பதால் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஜெயகுமார் சொல்வது தவறு
ஜெயக்குமாரின் பேட்டிக்கு பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது கொடநாடு கொலை வழக்கு பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று அதிமுக ஜெயகுமார் சொல்வது தவறு. வழக்கைபற்றி விவாதம் இல்லை. முன்னாள் முதல்வர் ஆளுநரிடம் தன்னை கொலை வழக்கில் சேர்க்க அரசு முயற்சிக்கிறது என்று புகார் அளித்தால் அதை விவாதிக்கலாம் என்று பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சபாநாயகரிடம் அனுமதி
சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது இதைபோன்ற பரபரப்பான,பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கத்தான் விதி எண்55 உள்ளது. அதிமுகவும் சபாநாயகரிடம் அனுமதி பெற்று விவாதத்தில் பங்கேற்கலாம் .வெளியே சொல்லும் குற்றசாட்டுக்களை சட்டமன்றத்தில் சொல்லலாம் என்றும் பீட்டர் அல்போன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
கோவை மக்களுக்கு ஜாக்பாட்! பல மாத காத்திருப்புக்கு விடிவுகாலம்.. மெகா திட்டத்திற்கு கிரீன் சிக்னல்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
இதெல்லாம் நம்ப மாட்டேன்.. ஸ்டாலின் 'டபுள் செக்' அதிரடி! திமுகவில் நடுங்கும் தலைகள்.. என்ன நடக்குது? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications