சென்னையில் பெட்ரோல் விலை மிரளவைக்கும் அதி உச்சம்- 1 லிட்டர் ரூ106.04-க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் இதுவரை இல்லாத அதி உச்சமாக ரூ106.04க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்தியாவில் பெட்ரோல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு படுவேகமாக அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை கடந்த 170 நாட்களில் 70 முறைக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் 20 பைசா, 30 பைசா என பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இத்தனைக்கும் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை மீதான வரி குறைக்கப்பட்டும் பயன் தராத நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அதி உச்சம்
சென்னையில் இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ106.04-க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை ரூ102.25க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ரூ105.74-க்கு நேற்று பெட்ரோல் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 30 காசுகள் அதிகரித்தது. அதேபோல் டீசல் நேற்று 101.92க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலைவாசி அதிகரிப்பு
சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று காலை முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் படிப்படியாக அதிகரிப்பது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

மிரள வைக்கும் எண்ணெய் நிறுவனங்கள்
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கின்றன. அதுவும் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக ஒருபோதும் பெட்ரோல்,டீசல் விலை குறைந்ததாகவும் இல்லை. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயிக்கும் முறையை மாற்ற வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

தமிழகத்தில் போராட்டங்கள்
நாட்டில் லாக்டவுன் அமலில் இருந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டும்தான் பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருந்தது. அப்போது பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் கை வைக்காமல் அமைதி காத்தன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ110ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களில் மத்திய அரசைக் கண்டித்தும் மிதிவண்டிப் பேரணிகளை நடத்தியும் எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர்.
-
தமிழகத்தில் பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்குகள் மூடல்.. மக்கள் அவதி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications