ஊருக்குப் போறீங்களா? ஜாலியான கோடை விடுமுறைக்கு தெற்கு ரயில்வே அதிரடி! 50+ சிறப்பு ரயில்கள் தயார்
சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரவுள்ள கோடை விடுமுறையைக் கொண்டாடப் பொதுமக்கள் இப்போதே பிளான் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் ஜாலி டூர் செல்ல ரெடியாகி வருகிறார்கள். அதனால்தான் பயணிகளின் வசதிக்கு ஸ்பெஷல் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
பள்ளிகள் விடுமுறை விடப்படுவதால், கோடையை சிறப்பாக கழிக்க பெரும்பாலான குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர். சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும், மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏலகிரி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜாலி டூர் - கோடை காலம்
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வழக்கமான ரயில்களில் கூட்டம் நெருக்கித் தள்ளும் என்பதால், பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே இந்த ஆண்டும் அதிரடியாக 50-க்கும் மேற்பட்ட கோடை கால சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளதால், நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள் பெரிய நிம்மதி அடைந்துள்ளனர்..
சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் எப்போதும் கடுமையான டிக்கெட் தட்டுப்பாடு நிலவும்.
அதனால்தான் இந்த நிலைமையை சமாளிக்கத் தாம்பரம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து வாராந்திர மற்றும் இருவார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்
குறிப்பாக சென்னை எழும்பூர் - நாகர்கோவில் மற்றும் தாம்பரம் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ரயில்கள் வார இறுதி நாட்களில் பயணிகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.. அதேபோல், மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.. இந்த ரயில்களுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதால், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க விரும்பும் பயணிகள் ஐஆர்சிடிசி வெப்சைட் மூலம் இப்போதே தங்கள் டிக்கெட்டுகளை கன்பார்ம் செய்து கொள்ளலாம்.
தெற்கு ரயில்வேயின் இந்த ஸ்பெஷல் ரயில்கள் கோயம்புத்தூர், பெங்களூரு, எர்ணாகுளம் போன்ற முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.
ஸ்பெஷல் ரயில்கள் - சுற்றுலா
கோடை விடுமுறையில் கேரளாவிற்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்பதால், கொச்சுவேலி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளுக்கும் கூடுதல் ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.. இந்த சிறப்பு ரயில்களில் சாதாரண 2ம் கிளாஸ் பெட்டிகள் முதல் ஏசி வசதி கொண்ட பெட்டிகள் வரை அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பயணிகள் தங்கள் வசதிக்கு ஏற்ப டிக்கெட்டுகளைப் பதிவு செய்து கொள்ளலாம்.. மேலும், முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் மற்றும் உதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக மலை ரயில் சேவைகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.. குறிப்பாக மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையேயான மலை ரயிலில் பயணிக்கப் பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுவதால், சுற்றுலா பயணிகளின் கோரிக்கையை ஏற்று சில சிறப்புச் சேவைகள் வழங்கப்பட உள்ளன.
ரயில்வே கால அட்டவணை
ஏப்ரல் 1ம் தேதி முதல் ரயில்வே கால அட்டவணையில் சில சிறு மாற்றங்கள் வர வாய்ப்புள்ளதால், பயணிகள் தங்கள் பயணத்தை தொடங்கும் முன்பு அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் ரயில் நேரத்தை சரிபார்த்து கொள்வது நல்லது. இந்த சிறப்பு ரயில்கள் குறித்த விரிவான விவரங்களை ரயில்வே விசாரணை மையங்கள் அல்லது ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்..
ஒட்டுமொத்தமாக தெற்கு ரயில்வேயின் இந்த முன்னெடுப்பு கோடை விடுமுறைப் பயணத்தைப் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும் மாற்றும் என்பதால் பயணிகளுக்கு நிம்மதி கிடைத்து வருகிறது.. ஒருவேளை புக்கிங் செய்ய தவறினால் தட்கல் மூலமும் பயன்படுத்தலாம். ஆனாலும் சிறப்பு ரயில்களை பயன்படுத்துவது மிகவும் நிதானமான பயணத்திற்கு வழிவகுக்கும்.
இந்த தகவலை ஊருக்கு செல்ல தயாராகும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடனே பகிருங்கள், அவர்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய இது ஒரு சூப்பர் சான்ஸாக இருக்கும்...!!
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications