பிளம்பர் டூ பல் மருத்துவர் வரை.. பிளை துபாய் விமானத்தில் இந்திய விமானிக்கு உதவிய 4 சக பயணிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு நேற்று காலை புறப்பட்ட பிளை துபாய் விமானத்தை கடத்தி மோத வைக்க நடைபெற்ற முயற்சி இந்திய விமானியின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டது. துணை விமானியாக இருந்த ஓமன் நாட்டை சேர்ந்தவர், இந்திய விமானியை தாக்கிவிட்டு விமானத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்து மோத வைக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இந்திய விமானி ஸ்மித் மச்சாரின் துணிச்சலான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து இந்திய விமானிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இந்த சம்பவத்தில் இந்திய விமானி மட்டுமின்றி மேலும் 4 பேரும் துணிச்சலாக செயல்பட்டு இருக்கிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

Plumber to a dentist 4 fellow passengers helped an Indian pilot on a Flydubai flight

விமானிகளுக்குள் சண்டை நடைபெற்ற போது, காக்பிட் அறைக்குள் துணிச்சலாக புகுந்த 4 இஸ்ரேலிய பயணிகள், தாக்குதல் நடத்தியவரை துணை விமானியை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர், பணியில் இல்லாத 2 மாற்று விமானிகள் காக்பிட் அறைக்குள் சென்று விமானத்தை கண்ட்ரோல் செய்து ஒமனில் உள்ள சிறிய விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.

பிளம்பர் யானிவ் ஹயூன்

இதில், யானிவ் ஹயூன் என்ற பயணிதான், துணை விமானியின் கழுத்தைப் பிடித்து முதலில் மடக்கியுள்ளார். பின்னர் விமானத்தின் கண்ட்ரோல் லிவரையும் பின்னோக்கி இழுத்ததாக கூறப்படுகிறது. மற்ற இருவரான அசாப் ராஜுவான் மற்றும் ஸ்விகா மேனஸ் ஆகியோரும் விமான ஊழியர்களுக்கு உதவி செய்து, தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்து கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையில், பல் மருத்துவரான ஷோட்டா முசாயேவ், படுகாயமடைந்த மச்சார் என்பவருக்கு முதலுதவி அளித்து, அவரது உடலில் ஏற்பட்ட ரத்தக்கசிவை கட்டுப்படுத்தி உயிரை காப்பாற்றியுள்ளார். இதில் யானிவ் ஹயூன் என்பவர் பிளம்பராக பணியாற்றி வருகிறார். டிவியில் பார்த்த அனுபவத்தை வைத்து விமானத்தை கட்டுப்படுத்த யோக் கம்பியை பின்னோக்கி இழுத்து பெரும் சேதத்தை தவிர்க்க முக்கிய பங்காற்றியுள்ளார்.

இன்சூரன்ஸ் ஏஜென்சி உரிமையாளர் ஆசாப் ராஜவுன்

அடுத்ததாக ஆசாப் ராஜவுன். இவர் ஒரு இன்சூரன்ஸ் ஏஜென்சி உரிமையாளர் ஆவார். தாய்லாந்தில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு திகில் படத்தின் அனுபவத்தை போல இருந்ததாக கூறும் அசாப் ராஜவுன், காக்பிட் அறைக்குள் விமானியை மடக்கி பிடிக்க உதவியதாக தெரிவித்துள்ளார்.

விமான ஊழியர்கள் சிலரும் தங்களுக்கு உதவியதாகவும், தாக்குதல் நடத்திய துணை விமானியை 50 நிமிடங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாகவும் இதனால், விமானத்தை சவுதி அரேபியாவில் தரையிறக்க முடிந்ததும் என்றும் கூறியுள்ளார்.

ஸ்விகா மேனஸ்

பேங்க் லியூமியின் அண்டர்ரைட்டிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள ஸ்விகா மேனஸ் என்பவரும் விமானத்தில் ஏற்பட குழப்பத்தின் போதும் துணிச்சலாக செயல்பட்ட பயணிகளில் ஒருவர் ஆவார். இவர் "விமானத்தில் வழங்கப்பட்ட மல்டிமீடியா ஹெட்போன்களின் கேபிள்களைப் பயன்படுத்தி துணை விமானியை கட்டிப்போட்டோம். அதன்பிறகே அவரை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது" என்றார்.

பல் மருத்துவர் முசயேவ் சோட்டா

அதேபோல, கத்திக்குத்தால் பாதிக்கப்பட்ட இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு விமானத்தில் முசயேவ் சோட்டா என்பவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். இவர் பல் மருத்துவர் ஆவார். இவர் தான் உரிய நேரத்தில் ஸ்மித் மச்சாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இதுபற்றி பல் மருத்துவர் முசயேவ் சோட்டா கூறும் போது, ''கத்திக்குத்து காயத்தில் பைலட் துடித்ததும் உடனடியாக ஓடி சென்று முதலுதவி செய்தேன். பைலட் மிகவும் மோசமான நிலையில் இருந்தார்.

பைலட்டின் உடல் முழுவதும் வெட்டுக்காயம் இருந்தது. அந்த விமானத்தில் பயணித்த ஒரே டாக்டர் நான் தான். இதனால் அவரது உடலில் இருந்து வெளியேறும் ரத்தத்தை முதலில் நிறுத்தினேன். விமானம் தரையிறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு வரை பைலட்டின் உட்நிலை ஓரளவு சீராகவே இருந்தது. விமானம் தரையிறங்கியதும், உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், ஆபத்தான கட்டத்தை கடந்துவிட்டார். தற்போது பைலட் உடல்நிலை சீராக உள்ளது" என்றார்.

இஸ்ரேல் செல்ல இருந்த விமானத்தில் பெரும் அசம்பாவிதத்தை நிகழ்த்த முயன்றதை வெற்றிகரமாக தடுத்தவர்களில் விமானி உள்பட இந்த 5 பேரின் பங்கு மிகப்பெரியது என்று சர்வதேச ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+