'கேலோ' மட்டுமல்ல- டிடி பொதிகை சேனல் பெயரை டிடி தமிழ் என மாற்றி தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!
சென்னை: தமிழ்நாட்டுக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி கேலோ விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதுடன் புதுப்பிக்கப்பட்ட டிடி பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் தொடங்கி வைக்கிறார். மேலும் நாட்டில் ஒளிபரப்புத் துறையை வலுப்படுத்த ரூ.250 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 10.45 மணியளவில், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 2:45 மணியளவில், கர்நாடகாவின் பெங்களூருவில் போயிங் இந்தியா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, போயிங் சுகன்யா திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 6 மணியளவில், சென்னையில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 இன் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்பார்.

தென்னிந்தியாவில் முதல் முறை: சென்னையில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் நடைபெறவுள்ள 6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-இன் தொடக்க விழாவில் பிரதமர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். தென்னிந்தியாவில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு நகரங்களில் 2024 ஜனவரி 19 முதல் 31 வரை நடைபெறும்.
ராணி வேலுநாச்சியார்: இந்த விளையாட்டுப் போட்டியின் சின்னம் வீர மங்கையாகும். வீர மங்கை என்று அன்பாக அழைக்கப்படும் ராணி வேலு நாச்சியார், பெண்கள் சக்தியின் வலிமையை உள்ளடக்கிய இந்த சின்னம், பெண்களின் வீரம் மற்றும் உணர்வை அடையாளப்படுத்துகிறது. விளையாட்டுப் போட்டிகளின் அடையாளச் சின்னத்தில் திருவள்ளுவரின் உருவம் இடம்பெற்றுள்ளது.
சிலம்பம் டெமோ விளையாட்டு அறிமுகம்: 26 விளையாட்டுப் பிரிவுகள், 275-க்கும் மேற்பட்ட போட்டி நிகழ்வுகள் மற்றும் 1 டெமோ விளையாட்டு ஆகியவற்றுடன் 15 இடங்களில் 13 நாட்கள் நடைபெறும் இந்தக் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் பதிப்பில் 5600 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். 26 விளையாட்டுப் பிரிவுகள் கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து போன்ற வழக்கமான விளையாட்டுகளுடன் களரிப்பயட்டு, கட்கா, தாங்டா, கபடி மற்றும் யோகாசனம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளின் கலவையாகும். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக டெமோ விளையாட்டாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
டிடி பொதிகை இனி டிடி தமிழ்: தொடக்க விழாவின் போது, சுமார் ரூ .250 கோடி மதிப்பிலான ஒளிபரப்புத் துறை தொடர்பான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார். புதுப்பிக்கப்பட்ட டிடி பொதிகை சேனலை டிடி தமிழ் என்ற பெயரில் தொடங்குவது; 8 மாநிலங்களில் 12 ஆகாஷவாணி பண்பலை நிகழ்ச்சிகள்; மற்றும் ஜம்மு காஷ்மீரில் 4 தூர்தர்ஷன் டிரான்ஸ்மிட்டர்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும், 12 மாநிலங்களில் 26 புதிய பண்பலை ஒலிபரப்புத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
-
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications