விட மாட்டேன்..கடலூரில் மீண்டும் களமிறங்கும் அன்புமணி ராமதாஸ்! ஜனவரியில் போடும் ப்ளான்! இதற்காகவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாமக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அன்புமணி ராமதாஸ் நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வருகின்ற ஜனவரி 7,8 தேதிகளில் மக்கள் எழுச்சி நடைபயணம் மேற்கொள்வதாக அக்கட்சியினர் கூறியுள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே ஒவ்வொரு மாவட்டத்தில் நடத்தப்பட்ட பொதுக்குழுவிலும் கலந்து கொண்ட அன்புமணி, கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று வருகிறார்.

அங்கு புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை சந்தித்து எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் நிலை குறித்து அலசி ஆராய்ந்து, செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்தி வருகிறார்.

 அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

கடந்த சில மாதங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கொசஸ்தலை ஆற்றினை பாதுகாக்க, தடுப்பணை கட்டும் ஆந்திர அரசுக்கு எதிரான போராட்டத்தை பள்ளிப்பட்டு நகரில் நடத்தினார். கொங்கு பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் அத்திக்கடவு அவினாசி திட்டம், சேலம் மேட்டூர் காவிரி உபநீர் திட்டம் போன்ற திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும், அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்.

என்எல்சி

என்எல்சி

குறிப்பாக என்எல்சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டமே பாதிக்கப்பட்டிருக்கிறது எனவும், அதனை பாதிக்கப்பட்ட பேரிடர் மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என அன்புமணி கூறி வருகிறார். அந்நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த மண்ணின் மைந்தர்களுக்கு, கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத நிலையில் அதனை முழுவதுமாக இழுத்து மூட வேண்டும் என பாமக சார்பில் ஏற்கனவே பெரிய பூட்டோடு போராட்டத்தில் ஈடுபட்டார்.

நடைபயணம்

நடைபயணம்

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தின் மக்கள் விரோத போக்கை கண்டித்து வருகின்ற ஜனவரி 7,8 தேதிகளில் மக்கள் எழுச்சி நடைபயணம் மேற்கொள்வதாக அக்கட்சியினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக "50-ஆண்டுகளுக்கு மேலாக நிலம் கொடுத்த மக்களை சுரண்டி, இந்தியாவிலேயே அதிக லாபம் ஈட்டி ,மக்கள் வாழ்வாதாரத்தை சீரழித்து உயிரைப் பறிக்கும் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக என்.எல்.சி நிர்வாகத்திற்கு கரிசனம் வந்தததுபோல், கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ள எந்த உத்திரவாதமும் இல்லாத ஒப்பந்த வேலை வழங்கினர்.

மாபெரும் பேரழிவு

மாபெரும் பேரழிவு

அதை விரும்பாதவர்களுக்கு மொத்தமாகவோ மாதவாரியாகவோ ஒரு சிறிய தொகை வழங்கப்படும் என்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது போன்ற ஏமாற்று வேலைகளை கடலூர் மாவட்ட மக்கள் நம்ப மாட்டார்கள். கடந்த 60-ஆண்டுகளாக எங்கள் மண்ணின் கனிம வளங்களை கொள்ளையடித்து வாழ்வாதாரத்தை சீரழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இனியும் இந்த மாவட்டத்தில் என்.எல்.சி நிர்வாகத்தை அனுமதித்தால் இந்த மாவட்டம் மாபெரும் பேரழிவை சந்திக்க நேரிடும். எனவே NLC-க்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட கிராம மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து, மண்ணுரிமையை மீட்டெடுக்க வருகின்ற ஜனவரி 7,8 தேதிகளில் அன்புமணிராமதாஸ் மாபெரும் மக்கள் எழுச்சி எழுச்சி நடைபயணம் மேற்கொள்கிறார்" என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+