யாரையும் விட்றாதீங்க.. திட்டம் தீட்டி களமிறங்கிய அன்புமணி! அப்பா ப்ளான் தானாம்! உற்சாக பாட்டாளிகள்!
சென்னை : வன்னியர் சங்க காலம் முதல் பாமக இருக்கும் மூத்த நிர்வாகிகளையும், தற்போது கட்சியில் சேர்ந்திருக்கும் இளைஞர்களையும் ஒன்றாக இணைக்கும் வகையில் தமிழக முழுவதும் கிராமம் கிராமமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில் பாமகவின் உற்சாகியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்த பாமக நிறுவனர் ராமதாஸின் மகனும் அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் கடந்த மே மாதம் அக்கட்சியின் புதிய தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

அன்புமணி ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி 2.0 என்ற செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இதற்கு கட்சியினர் முழு மனதோடு ஒப்புதல் அளித்ததாக கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி கூறினார். தலைவராகப் பொறுப்பேற்றவுடனேயே கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு கிராமம், மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாகவும், குறிப்பாக, குடிநீர் பிரச்னைகள், சேலம் உபரிநீர்த் திட்டம், அத்திக்கடவு திட்டம் உள்ளிட்டவற்றைச் செயல்படுத்தவிருக்கிறோம். பாமக 2.0 செயல் திட்டம் மூலம் மக்களின் அன்றாடப் பிரச்னைகளைச் சரிசெய்து, மக்களின் ஆதரவைப் பெறுவோம் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார்.

பாமக 2.0
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக இருக்கும் பொழுதே கட்சியை பலப்படுத்தும் நோக்கில், கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்து திட்டங்களை வகுத்த பொழுது, கொரோனா ஊரடங்கு வந்ததால் தடைப்பட்டது. இதனையடுத்து தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் கடந்த ஜூலை 9 ஆம் தேதி முதல் ளும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் 60 இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருத்தணி முருகனை வழிபட்டு பயணத்தை தொடங்கிய அவருக்கு செல்லும் இடமெல்லாம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுற்றுப்பயணம்
சுமார் இரண்டு நாட்கள் அன்புமணி ராமதாஸ் திருவள்ளூர் மாவட்டத்தில் 60 கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது நள்ளிரவைஉ தாண்டியும் அவரை காண்பதற்காக ஏராளமான காத்திருந்து வரவேற்றது அவரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல இடங்களில் பூக்களை தூவியும் கிரேன்களில் மாலை அணிவிப்பது என பிரம்மாண்டம் காட்டினர் பாமகவினர். இதனால் உற்சாகமடைந்த அன்புமணி ராமதாஸ் அடுத்த கட்டமாக இரண்டாம் கட்ட சுற்றுப்பயண திட்டத்தை வகுத்துள்ளார்.

தந்தையின் பாணி
திருவள்ளுவர் சுற்றுப் பயணம் முடிந்துள்ள நிலையில் விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்தடுத்து அவர் கிராமம் கிராமமாக சென்று தொண்டர்கள் மூத்த நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் எப்படி ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுனாரோ அதேபோல தற்போதும் அதே பாணியை கையில் எடுத்திருக்கிறார் அன்புமணி என்கின்ற பாட்டாளி மக்கள் கட்சியினர்.

உற்சாகத்தில் பாட்டாளிகள்
குறிப்பாக வன்னியர் சங்க காலம் தொட்டு கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளையும் தற்போது புதிதாக சேர்ந்துள்ள இளைஞர்களையும் ஒன்றிணைத்து செயல்படுவதே அவரது நோக்கம் எனவும் இதற்காகவே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்கின்றனர் பாமகவினர். கட்சியில் அனைவரும் முக்கியம் எனவும், மேலும் அதிருப்தியில் வெளியேறிவர்களையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து அடுத்து நடைபெறவுள்ள மக்களவை, சட்டமன்ற தேர்தல்களில் பாமகவை பலமிக்க கட்சியாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர் பாட்டாளிகள்.
-
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சசிகலாவை சந்தித்த கார்த்திக்.. பிரச்சாரத்திற்கு ரெடி? தெற்கில் ஆதரவை திரட்ட பிளான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications