எம்பிசி உள்ஒதுக்கீடு குறித்த அறிக்கை.. பி.சி. ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணை.. பாமக ராமதாஸ் வரவேற்பு
சென்னை: எம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர பி.சி ஆணையத்திற்கு ஆணை பிறப்பித்துள்ள அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டவாறு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள்ள சமூகங்களின் உள் இடஒதுக்கீட்டு கோரிக்கை குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நாட்டும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

ஆய்வு வரம்பு
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடந்த நவம்பர் 17-ஆம் தேதி ஆணை பிறப்பித்திருந்தது. அந்த ஆணையத்திற்கு மொத்தம் 6 ஆய்வு வரம்புகளை தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்திருந்தது. இப்போது கூடுதலாக ஓர் ஆய்வு வரம்பை சேர்த்து அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.

உச்சநீதிமன்றம்
'' உச்சநீதிமன்றம் கடந்த 31.03.2022-ஆம் நாள் சி.ஏ. 2600/2022 என்ற எண் கொண்ட வழக்கில் அளித்த தீர்ப்புரையின் 68 மற்றும் 73 பத்திகளில் தெரிவித்திருக்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள் ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது'' என்று ஆணையில் கூறப்பட்டுள்ளது.

சமூகநீதி
தமிழ்நாட்டில் முழுமையான சமூகநீதியை நிலை நிறுத்த, உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் வழிகாட்டியவாறு தேவையான தரவுகளை சேகரித்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பல முறை கடிதங்கள் வாயிலாகவும், அறிக்கைகள் மூலமாகவும் கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

சமூகநீதி
சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள்ள சமூகங்களின் உள் இடஒதுக்கீட்டு கோரிக்கை குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் பரிந்துரை அளிக்கும்படி பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறித்த காலத்திற்குள் ஆணையத்தின் பரிந்துரையைப் பெற்று எம்.பி.சி மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
பள்ளிக் கல்வித் துறையில் பின்னடைவு! காலையில் எக்ஸ் பதிவு! உடனே அமைச்சர் நடவடிக்கை! விசிக எம்பி நன்றி! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!











Click it and Unblock the Notifications