சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரே கல்லில் 2 மாங்காயை.. ஸாரி.. மாம்பழத்தை அடிக்க ராமதாஸால்தான் முடியும்!

விழுப்புரம் தொகுதியில் மாஸ்டர் பிளானை பாமக கையில் எடுத்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விழுப்புரம் தொகுதிக்கு ராமதாஸ் போடும் கணக்கு

    சென்னை: யாருக்குதான் வெற்றி என்று சொல்ல முடியாத ஒரு நிலைமை விழுப்புரம் தொகுதிக்கு ஏற்பட்டுள்ளதாம்!

    விழுப்புரம் ஒரு தனி தொகுதி. இங்கு தலித்துகள், வன்னியர் சமுதாயத்தினர் பெருமளவில் வசிக்கிறார்கள். இந்த விஷயத்தை நன்றாக உணர்ந்த அதிமுக-திமுக சரியாக காய் நகர்த்தி வருகின்றனர்.

    திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த கட்சி சார்பில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். எல்லா கூட்டணி கட்சியும் அந்தந்த சின்னத்தில் போட்டியிடும்போது, ரவிக்குமார் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.

    என்ன கனவில் இருந்தார்களோ.. கடலூர் சில்வர் பீச்சில் மூழ்கி 3 மாணவர்கள் பலி.. ஒரு மாணவன் மாயம்என்ன கனவில் இருந்தார்களோ.. கடலூர் சில்வர் பீச்சில் மூழ்கி 3 மாணவர்கள் பலி.. ஒரு மாணவன் மாயம்

    உதயசூரியன்

    உதயசூரியன்

    மோதிரம் சின்னத்துக்காக திமுகவிடம் விசிக மல்லுக்கட்டி வந்தாலும், இறுதியாக ஒதுக்கப்பட்டு, ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டதும் உதயசூரியன் சின்னம்தான்! நன்கு பரிச்சயமான சின்னம் உதயசூரியன். அதை எதிர்த்து நிற்பது மாம்பழம். அதனால்தான் மோதிரம் சின்னம் வேண்டாம், உதயசூரியனே இருக்கட்டும் என்று காரணம் சொல்லப்படுகிறது.

    தேனி மாவட்டம்

    தேனி மாவட்டம்

    அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் வடிவேல் ராவணன் வேட்பாளராக களம் இறங்குகிறார். கட்சியின் மூத்த தலைவர் மட்டுமல்லாது, பொதுச்செயலாளரும்கூட. இவரது சொந்த மாவட்டம் தேனி. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இருந்தாலும் முழுக்க முழுக்க பாமக மற்றும் வன்னியர் சமூக ஓட்டுக்களையே நம்பி நிற்கிறார். சுருக்கமாக சொல்ல போனால் பண பலம் இல்லை என்றாலும் இவருக்கு பலமே பாமகதான்.

    [இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்]

    வேட்பாளர்கள்

    வேட்பாளர்கள்

    ஒருவேளை திமுக நேரடியாக இங்கு போட்டியிருந்தால் வடிவேல் நிலைமை கொஞ்சம் சிக்கல்தான். இப்போதைக்கு தொகுதியை பொறுத்தவரை வடிவேல் ராவணனும், ரவிக்குமாரும் ஒருத்தருக்கொருத்தர் சளைக்காத வேட்பாளர்களாகவே தெரிகிறார்கள். ஆனால் இவர்களில் வெற்றி பெற போவது யார் என்பது அமமுக கையில்தான் உள்ளது... அதாவது, அமமுக வாங்கக்கூடிய ஒவ்வொரு ஓட்டும் இவர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்ககூடிய ஓட்டுக்களாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

    பாமக பிளான்

    பாமக பிளான்

    வடிவேல் ராவணனை இங்கு வேட்பாளராக நிறுத்த ஒரு காரணம் இருக்கிறதாம். ஏற்கனவே வட மாவட்டங்களில் வலுவான பாமக, தென் மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் ஆழமாக கால்பதித்து வருகிறது. ஒருவேளை வடிவேல் ராவணன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டால், தென்மாவட்டத்தில் பாமக செல்வாக்கை விரிவுபடுத்தலாம் என்று கணக்கு போடுகிறதாம்.

    DMK vs AIADMK: திமுக vs அதிமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள் DMK vs AIADMK: திமுக vs அதிமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்

    டாக்டர் ராமதாஸ்

    டாக்டர் ராமதாஸ்

    அதனால்தான் இவரை கையில் எடுத்துள்ளது. வடிவேலுக்கு எப்படியும் விழுப்புரத்தில் வன்னியர் ஓட்டு ஒரு பக்கமும், தலித் ஓட்டுக்கள் ஒரு பக்கமும் என சேர்ந்து விழும் என்பதால் இந்த ஐடியாவை முன்எடுத்ததாக கூறப்படுகிறது. ஒரே கல்லில் 2 மாங்காயை.. ஸாரி.. மாம்பழத்தை அடிக்க ராமதாஸால்தான் முடியும்!

    English summary
    PMK Founder Dr Ramadoss has taken a new strategy in the Villupuram constituency. It is said that PMK will have a chance to win.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X