சித்ராவின் மரணத்திற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் "முல்லை"தான் காரணமா.. போலீஸார் விசாரணை
சென்னை: முல்லை கேரக்டர்தான் நடிகை சித்ராவின் உயிரை பறித்ததா என போலீஸார் நடிகர், நடிகைகளிடம் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வந்த சித்ரா நேற்று காலை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சித்ராவும் பூந்தமல்லி கரையான்சாவடியைச் சேர்ந்த ஹேம்நாத்தும் காதலித்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பெரியவர்கள்
ஜனவரி மாதம் இவர்களது திருமணத்தை பெரியவர்களே நடத்தவிருந்த நிலையில் திடீரென பதிவு திருமணம் செய்து கொண்டது ஏன், இத்தனை நாட்களாக திருவான்மியூர் வீட்டிலிருந்து படப்பிடிப்புக்கு சென்று வந்த சித்ரா திடீரென ஹோட்டலில் தங்கியது ஏன், குளிக்கச் சென்ற போது ஹேம்நாத்தை சித்ரா வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஹேம்நாத்
திருமண நிச்சயதார்த்துக்கு பிறகு கரையான்சாவடியில் உள்ள ஹேம்நாத்தின் வீட்டில் சித்ரா தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. மக்கள் தூக்கி வைத்து கொண்டாடும் முல்லை கேரக்டரே சித்ராவின் உயிரை பறித்ததாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

மோதல்
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை கேரக்டரில் 3ஆவது மருமகளாக நடித்த சித்ரா கணவராக நடித்த குமரனுடன் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டது ஹேம்நாத்துக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுவே இருவருக்கும் இடையே மோதலாக மாறி இருக்கலாம் என தெரிகிறது.

போன் செய்தவர்கள்
இதுகுறித்து இன்று இரண்டாவது நாளாக சித்ராவுடன் நடித்த நடிகர், நடிகைகள், நண்பர்கள், பெற்றோர், கணவர் ஹேம்நாத் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னால் சித்ரா யாரிடம் எல்லாம் பேசினார், அவருக்கு போன் செய்தவர்கள் யார் யார்?

விசாரணை
குறிப்பாக சித்ராவின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டது எப்படி என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications