நடிகை சித்ரா ஹேண்ட் பேக்கில் இருந்த 'அந்த' பொருள்?.. லட்டு மாதிரி கிடைத்த க்ளூ.. விசாரணை தீவிரம்
சென்னை: நடிகை சித்ராவின் ஹேண்ட்பேக்கில் 150 கிராம் கஞ்சா இருந்ததையும் அதனுடன் லோட் செய்யப்பட்ட சிகரெட்டையும் கண்டெடுத்துள்ளதால் அவருக்கு கஞ்சா விநியோகம் செய்த நபர் யார் என்பது குறித்து விசாரணை முடுக்கப்பட்டுள்ளது. சித்ரா கஞ்சாவை பயன்படுத்தினாரா இல்லை வழக்கை திசை திருப்ப யாரேனும் அவரது ஹேண்ட் பேக்கில் கஞ்சாவை வைத்தனரா என்பது தெரியவில்லை.
Recommended Video

நடிகை சித்ரா கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் தூக்கிட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
சித்ராவுக்கு திருமணம் ஆகி ஓரிரு மாதங்களே ஆவதால் இந்த வழக்கு குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு அவர் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி 250 பக்கங்களை கொண்ட விசாரணை அறிக்கையை சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

பொட்டலம்
இந்த நிலையில் நடிகை சித்ராவின் ஹேண்ட் பேக்கை ஆய்வு செய்த போலீஸார் அதிலிருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் அதை சிகரெட்டில் லோடு செய்யும் கருவியையும் கண்டெடுத்தனர். இதனால் சித்ராவுக்கு குடிப்பழக்கத்துடன் சேர்ந்து கஞ்சா பழக்கமும் இருந்துள்ளது தெரியவருகிறது.

மும்பை
இந்த வழக்கு கிட்டதட்ட நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் போல் இருப்பதாக கூறுகிறார்கள். மும்பையில் பெரிய பெரிய பிரமுகர்கள், நடிகர்களின் இல்ல பார்ட்டிகளிலும் விழாக்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வ சாதாரணமாக விநியோகம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

விசாரணை
அது போல் சுஷாந்துக்கு தண்ணீரில் கலந்து போதை பொருளை தினந்தோறும் கொடுத்ததாக நடிகை ரியா மீது அவரது தந்தை குற்றம்சாட்டியிருந்தார். சித்ரா வழக்கிலும் அவரது பையில் இருந்து கஞ்சா எடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு கஞ்சாவை விநியோகம் செய்யும் நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போதை பொருட்கள்
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை நடிகர், நடிகைகள் பயன்படுத்துவதாக உறுதி செய்யப்படாத புகார் எழுந்துள்ளது. இது போல் போதை பொருட்களை விநியோகம் செய்ய கஞ்சா வியாபாரிகள் ஈடுபட்டால் அவர்களை போலீஸார் எளிதாக கண்டறிந்து விடுகிறார்கள் என்பதால் அவர்கள் கல்லூரி மாணவர்களை குறி வைக்கிறார்கள்.

பழக்கம்
கல்லூரி மாணவர்களுக்கு அதிக பணத்தாசை காட்டி கஞ்சாவை விற்கும் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். எனவே சித்ராவுக்கு யாரேனும் நண்பர்கள் மூலம் கஞ்சா கிடைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஒரு வேளை ஹேமந்த் மூலம் கஞ்சா கிடைத்திருக்குமோ அல்லது அவருக்கும் அந்த பழக்கம் இருந்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

வழக்கு திசை திருப்ப
சித்ரா கஞ்சாவை பயன்படுத்தினாரா இல்லை வழக்கை திசை திருப்ப யாரேனும் அவரது ஹேண்ட் பேக்கில் கஞ்சாவை வைத்தனரா என்பது தெரியவில்லை. சித்ராவின் உடல் பகுதிகள் சோதனைக்கு சென்றுள்ளது. அதன் முடிவுகள் வந்தால்தான் சித்ராவுக்கு போதை பொருள் பழக்கம் இருக்கிறதா என்பது தெரியவரும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications