கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. மீண்டும் போராட வாட்ஸ் அப் குழு! சென்னையில் போலீஸ் குவிப்பு
சென்னை: கள்ளக்குறிச்சியில் 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணத்துக்கு நீதிகேட்டு போராட்டம் நடத்த சென்னை கல்லூரி மாணவர்கள் வாட்ஸ் அப்பில் குழு தொடங்கி ஆட்களை திரட்டுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

மாணவி மர்ம மரணம்
பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

கலவரம்
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபட்ட பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பெரும் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில் ஒரு கும்பல் பள்ளியின் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும், பள்ளி கட்டிடத்துக்கும் தீ வைத்தது. மேலும் சிலர் பள்ளியிலிருந்து மேசை, நாற்காலிகள், குளிர்சாதன பெட்டிகளை திருடிச் சென்றனர்.

கைது
போராட்டம் வன்முறையாக உருவெடுத்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். அவர்கள் மீது போராட்டக்கார்கள் கற்களை வீசி தாக்கியதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாலுகா, சின்ன சேலம், நயினாய் பாளையம் பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 300 க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வன்முறைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ள நிலையில், ஒரு கும்பல் திட்டமிட்டு உள்ளே புகுந்து பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். வாட்ஸ் அப் குழுமம் ஒன்றை தொடங்கி போராட்டத்துக்கு ஆட்களை திரட்டியதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வாட்ஸ் அப் குழு
மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மெரினாவில் போராட்டத்துக்கு திட்டமிட்டப்பட்டதாக கூறி போலீஸ் குவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் வாட்ஸ் அப்பில் குழு அமைத்து போராட்டக்காரர்களை திரட்டியதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சென்னை அண்ணாநகர், கீழ்ப்பாக்கத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மாணவர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications