சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக போலீசுக்கு இதுதான் சூப்பர் தீபாவளி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக காவலர்களுக்கு தீபாவளி பரிசாக வாரவிடுமுறையை கட்டாயமாக்கி முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    காவலர்களுக்கு ஒரு நாள் லீவு கன்பார்ம்… அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

    கடந்த செப்டம்பர் 13ம் தேதி மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், காவலர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

    அதில், பொது மக்களின் பிரச்சினைகளை காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க ஒரு கைபேசி செயலி உருவாக்கப்படும். காவல் நிலைய அதிகாரி விசாரணை அறிக்கை அந்த செயலியில் தரவேற்றம் செய்யப்படும். காவல்துறையினரின் நலன்களை பாதுகாக்க காவலர்களுக்கு வழங்கப்படும்.

    வீட்டுக்காவலில் இருந்த 2 தென் கொரியர்கள் செய்த செயல்.. வேதனையடைந்த நீதிபதி.. அதிரடி உத்தரவு!வீட்டுக்காவலில் இருந்த 2 தென் கொரியர்கள் செய்த செயல்.. வேதனையடைந்த நீதிபதி.. அதிரடி உத்தரவு!

    தற்செயல் விடுப்பு

    தற்செயல் விடுப்பு

    காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம் இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் . இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும். காவல் ஆளிநர்கள் தற்செயல் விடுப்பு ஒப்புதல் அளிக்கும் மென்பொருள் ( CLAPP ) APP 1 ரூபாய் 10 லட்சம் செலவில் உருவாக்கப்படும்" என்று கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவுகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாரம் ஒரு நாள் விடுமுறை உத்தரவுக்கு இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 13-9-2021 அன்று காவல் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது, அந்த விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 'காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்' என்று அறிவித்தார்கள்.

    அரசாணை பிறப்பிப்பு

    அரசாணை பிறப்பிப்பு

    இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம். செலவிடுவதற்காகவும் இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஒய்வு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதற்கான அரசாணை பிறப்பித்து இன்றைய தினம் (3-11-2021) உத்தரவிட்டுள்ளார்.

    அருமருந்து

    அருமருந்து

    காவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும். உற்சாகத்தோடும் தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும்" இவ்வாறு அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. காவலர்களின் வாரவிடுமுறையை கட்டாயமாக்கி முதல்வர் ஸ்டாலின் தீபாவளிக்கு முன்பு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    police week off compulsory from now: good news come from CM Mk Stalin Chief Minister mk Stalin today ordered the Tamil Nadu police to make the weekend compulsory as a Diwali gift. The government has also issued a 'GO' in this regard. An order has been issued to give one day off per week to all the constables from the rank of Second Constable to the Chief Constable.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X