அரசியல் கட்சி எப்போது? உண்மையை உடைத்த அண்ணாமலை.. இன்னும் 30 லட்சம் பேர் வேணுமே!
சென்னை: பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். 'வி தி லீடர்ஸ்' எனும் இயக்கத்தை தொடங்கி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறார். அடுத்த மாதத்தில் கட்சியின் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் 50 லட்சம் பேர் 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தில் சேர்ந்த பிறகு தான் அரசியல் இயக்கம் தொடங்கப்படும் என்று இன்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை 'வி தி லீடர்ஸ்' இயக்கத்தை தொடங்கி உள்ளார்.இந்த இயக்கம் சார்பில் சென்னையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. இதில் அண்ணாமலை பங்கேற்று பேசினார்.
அப்போது அண்ணாமலை தனது அரசியல் கட்சி எப்போது தொடங்கப்படும் என்பது பற்றி விளக்கினார். இதுபற்றி அண்ணாமலை கூறுகையில், ''வி தி லீடர்ஸ் இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்த பிறகு தான் அரசியல் இயக்கம் தொடங்கப்படும்'' என்று கூறினார்.
அண்ணாமலை தற்போது 'வுி தி லீடர்ஸ்' எனும் இயக்கத்தை தொடங்கி உள்ளார். அதில் ஆன்லைன் வழியாக உறுப்பினர்கள் சேர்க்கையை நடத்தி வருகிறார். இன்று மாலை 5.45 மணி நிலவரப்படி மொத்தம் 19 லட்சத்து 51 ஆயிரத்து 904 பேர் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 50 லட்சத்தை தொட வேண்டும் என்றால் இன்னும் 30 லட்சத்து 50 ஆயிரம் உறுப்பினர்கள் தேவையாக உள்ளது. இதற்கு இன்னும் பல மாதங்கள் வரை எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications
