சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துன்பங்களை போக்கி துயரங்களை அழிக்கும் போகிப்பண்டிகை... புராண கதை தெரியுமா

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் போக்கி என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி போகி என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உ

Google Oneindia Tamil News

சென்னை: போகி தினத்தன்று இறந்த நம் முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டுமென ஜோதிடம் சொல்கிறது.

தமிழ் ஆண்டின் ஒன்பதாவது மாதமான மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது நாளை போகி கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படும் இந்தப்பண்டிகை 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகி நாளில் வீடுகளில் உள்ள தேவையற்ற குப்பைகளை எரித்து, வீடுகளுக்கு வண்ணம் பூசி, மூலிகைகள், மாவிலைத் தோரணத்துடன் காப்பு கட்டி தை மகளை வரவேற்பது தமிழர் மரபு.

Pongal Special: Bhogi Festival Purana story

இப்போது நம் வீட்டில் முதலுதவிப்பெட்டி இருக்கிறது. சிலர் வீடுகளில் அது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நம் முன்னோர்கள் போகிப்பண்டிகை நாளில் ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, பிரண்டை, மாவிலை வைத்து காப்பு கட்டி அதை நோயில் இருந்து காக்கும் முதலுதவிப் பெட்டியாக கட்டி வைத்துள்ளனர்.

போகியன்று அழகுபடுத்தப்படும் வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். போகி கொண்டாடப்பட உள்ள நாளில் புராண கதைகளையும், காப்பு கட்டுவதன் தத்துவத்தையும் அறிந்து கொள்வோம்.

போகி பண்டிகைக்கும் தேவர்களின் தலைவன் இந்திரன் மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தேவர்களின் தலைவனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்.

கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார். அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார்.

இந்திரன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திரன். பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திரன் கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார். இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது.

போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நாலு நாளைக்கு அடாத மழை விடாது பெய்யும்போகி தொடங்கி காணும் பொங்கல் வரை நாலு நாளைக்கு அடாத மழை விடாது பெய்யும்

இதையட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும். போகி நாளில் விளக்கேற்றும் முன்பாக காப்புகட்டுகின்றனர். விடிய விடிய விளக்கேற்றி கடவுளை வரவேற்கின்றனர்.

காப்புக் கட்டு என்பது மூலிகைகள் அடங்கிய முதலுதவி பெட்டி. விஷக்கடி, அலர்ஜி, வயிற்றுப்போக்கு போன்ற சிறு சிறு பிரச்னைகளுக்குத் தேவையான மூலிகைகள் வீட்டில் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த காப்பினை கட்டுகின்றன. காப்புக் கட்டும் போது அதில் ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை, மாவிலை, தும்பை, பிரண்டை போன்ற மூலிகைகள் அடங்கியிருக்கும். காலப்போக்கில் பிரண்டை, தும்பை போன்ற மூலிகைகளை விட்டு தற்போது ஆவாரை, சிறுபீளை, வேப்பிலை வைத்து கட்டுகின்றனர்.

வேப்பிலை சிறந்த கிருமிநாசினி. காற்றில் பரவும் கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் திருவிழாக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் வேப்பிலை தோரணம் கட்டுவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில்தான் காப்புக் கட்டு சடங்கு மூலமாக வீட்டிலும் வேப்பிலையை வைத்திருக்கச் செய்தார்கள் முன்னோர்கள்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்கும் இந்த மூலிகை, ஆண்டு முழுவதும் கிடைக்கும் என்றாலும், மார்கழி மாதப் பனியில் செழிப்பாக வளர்ந்திருக்கும். சிறுநீர் கல்லை உடைக்கும் அபாரமான சக்தி படைத்தது இந்த மூலிகை. நீர்க்கடுப்பு, சிறுநீர் கல் போன்ற பிரச்னைகளுக்காகவே இதனையும் காப்புக் கட்டு என்ற பெயரில் வீட்டில் வைத்திருந்தனர் முன்னோர்கள்.
உடல் சூட்டைத் தடுக்கும் அற்புதமான மூலிகை ஆவாரை. ஆவாரம் பூ இதழ்களை, நிழலில் உலர்த்தி, பொடி செய்து, கஷாயம் காய்ச்சிக் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுக்குள் வரும்.

போகிப்பண்டிகை கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் நாமும் வீடுகளை அலங்கரித்து காப்பு கட்டுவோம். நோய்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் தற்காத்துக்கொள்வோம்.

English summary
Shastra says that our ancestors who died on the day of Bhogi come to our home. So the astrologer tells them to create their favorite food and worship the fire with coconut, betel, baguette, banana and puttadai.On this auspicious day when Bhogi festival is celebrated, we too will decorate and build houses. Let us defend ourselves against disease and suffering.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X