ஆளுநர் மாளிகை தர்பார் ஹால் ‘பாரதியார் மண்டபம்’ஆக பெயர் மாற்றம்.. பெயர் பலகையை திறந்துவைத்த ஜனாதிபதி!
சென்னை: ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு பாரதியார் மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு. பாரதியார் திருவுருவப் படத்தையும் திறந்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலுக்கு, 'மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அரங்கம்' என புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று, புதிய பெயர் பலகையை திறந்து வைத்துள்ளார். அதற்கான கல்வெட்டையும் திறந்து வைத்துள்ளார்.

ஆளுநர் மாளிகை அரங்கில் மகாகவி பாரதியாரின் உருவப்படத்தையும் ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அமைச்சர்கள், இசை அமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆளுநர் மாளிகையில் உள்ள இந்த அரங்கில் தான், அமைச்சர்கள், தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு இரவு விருந்து அளிக்கிறார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications