பிரதமர் மோடி, உ.பி. அரசை அவதூறாக பேசிய சாமியார்.. சென்னை வந்து கைது செய்த உ.பி. போலீஸ்!
சென்னை: பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச அரசு குறித்து அவதூறு பரப்பிய சாமியார் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த மாதவரம் மாதவரம் வி ஆர் டி நகர் 2=வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மன்மோகன் மிஸ்ரா (62). இவர் தன்னை சாமியார் என்று அழைத்துக் கொண்டும், மண்ணடியில் அறக்கட்டளை ஒன்றும் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் உஷாராக இருக்க வேண்டும்.. கொரோனா வேகமாக பரவுகிறது.. மத்திய அரசு அட்வைஸ்
மேலும் மன்மோகன் மிஸ்ரா உத்தரப்பிரதசத்தில் மடம் ஒன்றை நடத்தி வருவதாகவும், அந்த மடத்துக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

மன்மோகன் மிஸ்ரா
கடந்த வாரம் மாதரவத்தில் இருந்த மன்மோகன் மிஸ்ரா கொரோன விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் ஹிந்தியில் பிரதமரை அவதூறாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. உத்தர பிரதேச அரசு தொடர்பாகவும் மன்மோகன் மிஸ்ரா விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.

உத்தர பிரதேச போலீசார்
இந்த வீடியோவை பார்த்த உத்தர பிரதேச பா.ஜ.க.வினர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள கொட்வாளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து உ.பி போலீசார் மன்மோகன் மிஸ்ராவை கைது செய்வதற்காக சென்னை விரைந்து வந்தனர். தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபுவை சந்தித்து தமிழக காவல்துறையின் உதவியை கேட்டனர்.

அதிரடி கைது
இதனை தொடர்ந்து மாதவரம் போலீசார் உதவியுடன் மன்மோகன் மிஸ்ரா வீட்டுக்கு சென்ற போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் ஜான்பூர் கொட்வாலி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மன்மோகன் மிஸ்ராவிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

போலீசார் எச்சரிக்கை
யூடியூப் மற்றும் சமூக வலைதங்களில் அவதூறாக பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் எந்த மாநிலத்தில், எந்த கிராமத்தில் இருந்து அவதூறு பரப்பினாலும் உள்ளூர் போலீசார் உதவியுடன் அவதூறு பரப்பும் நபர் கைது செய்யப்டுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.