விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்.. சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்டவர் என புகழாரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விவேக்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    #BREAKING நடிகர் விவேக் மரணம்.. பிரதமர் இரங்கல்!

    விவேக்கின் படங்களிலும், அவரது வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை பிரகாசித்தது என்று மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

    Prime Minister Narendra Modi has condoled the death of actor Vivek

    சின்ன கலைவாணர்' என்று அன்புடன் அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவர்கள் எவ்வளவு போராடியும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. வெறும் நடிகராக மட்டுமின்றி சமூக சேவை செய்தும், ஏழை, எளிய மக்களுக்கும் உதவி புரிந்து மக்கள் மனங்களை வென்ற விவேக் மறைவுக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், ' பிரபல நடிகர் விவேக்கின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவை தொனியும், புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. விவேக்கின் படங்களிலும், அவரது வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை பிரகாசித்தது. விவேக்கின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+