டாஸ்மாக் தனியார் மயம்.. தமிழக அரசுக்கு எவ்வளவு லாபம் வரும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளை தனியார் மயமாக்குவது குறித்து முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 4 ஆயிரம் கடைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. இந்த சூழலில் தனியார் மயம் ஆனால் தமிழக அரசுக்கு வருமானம் குறையுமா அல்லது அதிகரிக்குமா என்ற விவாதங்கள் எழுந்துள்ளது. உண்மையில் அரசு டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குவதன் மூலம் மிகப்பெரிய லாபம் சம்பாதிக்கவே வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஆளும் கட்சி நிர்வாகிகளும், டெண்டர் எடுப்பதன் மூலம் வளப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு மிக அதிமாகும்.

டாஸ்மாக் கடைகளை தவெக அரசு தனியார் மயமாக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். இந்த சூழலில் டாஸ்மாக்கை தனியார் மயமாக்கினால் கர்நாடகா மாடலில் தான் தமிழ்நாட்டிலும் மதுக்கடைகள் இயங்கும் என தெரிகிறது. அப்படி மதுக்கடைகள் இயங்க வேண்டும் என்றால், ஒவ்வொரு சில்லறை மதுக்கடை உரிமத்திற்கும் ஏலம் அறிவிக்கப்படும் போது, விண்ணப்பக் கட்டணமாகவே (திரும்பப் பெற முடியாத தொகை) பல ஆயிரம் கோடி ரூபாய் அரசு கருவூலத்திற்கு உடனடியாக கிடைக்கும்.

Privatization of TASMAC Do you know how much profit the Tamil Nadu government stands to make

எப்படி லாபம் வரும்

அதேபோல் மதுக்கடையை ஏலம் எடுப்பவர் ஆண்டு தோறும் கோடி கணக்கில் உரிமக் கட்டணத்தை அரசுக்குச் செலுத்த வேண்டியது வரும். பொதுவாக தனியார்கள் மதுக்கடைகளை நடத்தினாலும், அவர்கள் மதுபானங்களை டாஸ்மாக்கிடம் இருந்து தான் வாங்க வேண்டியதிருக்கும்.. அவர்கள் வாங்கும் போதே வரி செலுத்தி தான் வாங்க வேண்டியதிருக்கும். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், தனியார் மதுக்கடை உரிமையாளர்கள் டாஸ்மாக் கிடங்கில் இருந்து மதுபானப் பெட்டிகளை பாக்ஸ் பாக்ஸ்களாக வாங்கும் போதே, அவர்களின் கடைகளுக்குக் கொண்டு செல்லும் முன்பே, அதற்கான கலால் வரி மற்றும் மொத்த விற்பனை வரி முழுவதையும் அரசுக்கு முன்னதாகவே செலுத்திவிட வேண்டியது அவசியம் ஆகும். அப்படி செலுத்தினால் தான் அரசு மதுபானங்களை தரும். எனவே அவர்கள் மது பாட்டிலை வாடிக்கையாளருக்கு விற்கிறாரோ இல்லையோ, டாஸ்மாக்கிடம் இருந்து சரக்கை எடுக்கும் அந்த நொடியிலேயே அரசுக்கான வரி வருவாய் கருவூலத்திற்கு போய்விடும்.

எம்ஆர்பி விலையில் மதுபானம்

அரசு டாஸ்மாக்கை மூட விரும்பவுதற்கு சொல்லும் காரணம்..மக்களிடம் கெட்ட பெயர் வருகிறது. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு எம்ஆர்பியைவிட கூடுதலாக வசூலிக்கிறார்கள், தூய்மையாக பராமரிக்க முடியவில்லை என்று தான் கூறுகிறது. அதுமட்டுமின்றி, நடத்தி, பராமரிப்பதும் பெரிய சிக்கலாக இருக்கும். அந்த தொல்லைகள் எதுவும் தனியார் மயமானால் அரசுக்கு இருக்காது. பழி சொல்லும் ஏற்படாது. கடைகளுக்கான இடத்தின் வாடகை, மின்சாரக் கட்டணம், ஊழியர்களின் சம்பளம் என எதுவுமே அரசுக்கு செலவு ஏற்படாது. அனைத்தும் தனியார் முதலாளியின் கணக்கில் போகும். தனியார் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, இப்போது அரசுக்கு வரும் ₹50,000 கோடி வருமானம் என்பது ₹70,000 கோடி முதல் ₹80,000 கோடி வரை கூட எளிதாக உயரும். ஏனெனில் மொத்த வியாபார லாபம் + கலால் வரி + விண்ணப்பக் கட்டணம் + உரிமக் கட்டணம் என நாலாபுறமும் அரசுக்கு வருமானம் குவியும் என்பதால் அரசுக்கு நல்ல லாபமாகவே இருக்கும்.


ஊழியர்களுக்கு வேலை பறிபோகுமா

மதுவிற்பனையை அரசு தனியார் மயமாக்கினாலும் டாஸ்மாக் நிறுவனம் மூடப்படுவதற்கு வாய்ப்பே இல்லை. அந்த நிறுவனம் 'சில்லறை விற்பனையில்' இருந்து 'மொத்த விநியோகம் மற்றும் கண்காணிப்பு' அமைப்பாகவே மாற்றிவிடும். எனவே டாஸ்மாக் பணியாளர்கள் பலர் அந்த பணிகளுக்கு மாற்றப்படவே வாய்ப்பு அதிகம். இவர்கள் டாஸ்மாக்கில் நீண்ட காலம் பணியாற்றவர்கள் என்பதால் அவர்களுக்கு அங்கு பணி கடைக்கவே வாய்ப்பு அதிகம். மீதமுள்ளவர்கள் வேறு துறைகளுக்கு மாற்றப்படவும் வாய்ப்பு அதிகம்.

லாபம் எப்படி

தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் மதுக்கடைகளும் டாஸ்மாக்கில் இருந்து மட்டுமே சரக்கு வாங்க வேண்டும் என்கிற நிலை ஏற்படும். அதேபோல் கர்நாடகா, தெலுங்கானா பாணியில், மதுபான ஆலைகளிடம் இருந்து வாங்கும் கொள்முதல் விலை மற்றும் தனியார் கடைகள் விற்க வேண்டிய அதிகபட்ச சில்லறை விலையை அரசின் டாஸ்மாக் நிறுவனமே தீர்மானிக்கும். அதே போல் டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து வெளிவரும் சரக்குகளுக்கு மட்டுமே டிஜிட்டல் ஸ்டிக்கர் ஒட்டப்படும். அது டாஸ்மாக் குடோனில் இருந்து கடைகளுக்கு செல்வது வரை கண்காணிப்பும் கடுமையாக இருக்கும்.


நிதியிழப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை

போலிகளை விற்பதும் மிக கடினமாக்கும் வகையில் கர்நாடகாவில் உள்ளது போல் டிஜிட்டல் சிஸ்டத்தை அரசு கொண்டு வந்துவிடும். அரசை பொறுத்தவரை தனியார் மதுக்கடை வியாபாரிகள் முன்பணமோ அல்லது சரக்குக்கான முழுத் தொகையையோ செலுத்திவிட்டுத் தான் மதுபானங்களை எடுக்க முடியும் என்பதால், சில்லறை விற்பனையில் எங்காவது முறைகேடு நடந்தாலும், அரசுக்கான வரி முழுமையாக முதலியேயே வசூலிக்கப்பட்டு விடுவதால் அரசுக்கு எந்த நிதியிழப்பும் ஏற்பட வாய்ப்பே கிடையாது. அதேநேரம் ஆளும் கட்சி பிரமுகர்களே அதிக டெண்டர்கள் எடுக்க வாய்ப்பு உள்ளதால், அவர்களும் இந்த திட்டத்தால் வளமாகவே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+