ஜெயப்பிரதா யார்? சிக்கியது முக்கிய ஆதாரம்.. யார் அந்த "தலைகள்".. பரிதாப மாணவிகள்.. கிளம்பியது பூதம்

சென்னை எழும்பூரில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட ஜெயப்ரதாவிடம் விசாரணை நடந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 19 வயது மட்டுமே நிறைந்த இளம்பெண், தன்னுடைய தோழிகளை பாலியல் தொழிலுக்குள் தள்ளி, லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளார்.. இது தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி விட்டு வருகின்றன.

இளம்பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கும் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

எனவே போலீசார், தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் லாட்ஜூகள், ரிசார்ட்கள், ஹோட்டல்களில் திடீர் சோதனை நடத்தி, பாலியல் புரோக்கர்களை கைது செய்து சிறையில் தள்ளியும் வருகிறார்கள்.

சுழலும் வேட்டை

சுழலும் வேட்டை

அந்தவகையில்தான், சென்னை எழும்பூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில், பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. அதனால், விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார், சம்பந்தப்பட்ட லாட்ஜூக்குள் நுழைந்தனர்.. அப்போது, அங்கிருந்த ரூம்களை, பிரகாஷ் என்பவர் மொத்தமாக வாடகைக்கு எடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது தெரியவந்ததையறிந்து அதிர்ந்து போனார்கள். மகாராஷ்டிரா, பெங்களூரு, தர்மபுரி பகுதிகளில் இருந்து வந்திருந்த இளம்பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்...

லாட்ஜில் போலீஸ்

லாட்ஜில் போலீஸ்

அந்த பெண்களில் ஒருவர்தான் ஜெயப்பிரதா.. அங்கிருந்த பெண்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, ஜெயப்பிரதா மீது மட்டும் போலீசாருக்கு சந்தேகம் அதிகமாகவே எழுந்தது.. லாட்ஜூக்குள் போலீசாரை பார்த்ததுமே அதிர்ந்து போன ஜெயப்பிரதா, தனக்கு ஒன்றும் தெரியாது, நான் சாப்பாடு கொடுக்க வந்தேன் என்று சொல்லி சமாளித்தாராம்.. ஆனாலும், போலீசார் அவரது செல்போனையும் வாங்கி ஆய்வு செய்தபோதுதான், G-pay மூலம் நிறைய பேர், ஜெயப்பிரதாவுக்கு, லட்சக்கணக்கில் பணம் செலுத்தி இருப்பதை அறிந்து போலீசார் அதிர்ந்து போனார்கள். இதையடுத்து, இவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது..

ஜெயப்ரதா லாட்ஜ்

ஜெயப்ரதா லாட்ஜ்

இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வரும்நிலையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஜெயப்பிரதாவுக்கு 19 வயதுதான் ஆகிறது.. இன்னும் கல்யாணமாகவில்லை.. புதுவை சிவராந்தகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்.. பிரகாஷை உயிருக்குயிராக காதலித்துள்ளார்.. காதலனை தேடி சென்னை வந்தபோதுதான், தன்னுடைய காதலன், இந்த பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.. சொந்த ஊரை விட்டு வந்துவிட்டதால், திரும்பி செல்ல வழியுமின்றி, காதலன் பிரகாஷையும் நம்பி, இதே பாலியல் தொழிலில் ஈடுபட துவங்கினார்.

லாட்ஜ் ஜெயப்ரதா

லாட்ஜ் ஜெயப்ரதா

ஆனால், தான் சீரழிந்ததுடன், இளம்பெண்கள் பலரையும் மோசடி செய்து, இதே விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஜெயப்ரதாவுக்கு சோஷியல் மீடியா மூலம்தான் பிரகாஷ் அறிமுகமாகி உள்ளார்.. அவர் ஒரு பாலியல் புரோக்கர் என்பது தெரியாமலேயே காதலித்துள்ளார்.. சென்னை வந்த பெண்ணையும் இதே தொழிலில் பிரகாஷ் ஈடுபடுத்தியதுடன், அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஜெயப்பிரதாவிற்கு பிரகாஷ் ஆசை காட்டியுள்ளார்..

ஜெயப்ரதா கில்லாடி

ஜெயப்ரதா கில்லாடி

மேலும், கல்லூரி மாணவிகளையும் இதே பாலியல் தொழிலில் ஈடுபடுத்த திட்டம் போட்ட பிரகாஷ், இதற்காகவே, தன்னுடைய காதலி ஜெயப்ரதாவை, என்ஜினியங் காலேஜில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். தினமும் காலேஜ் செல்லும் ஜெயப்பிரதா, தன்னுடன் படிக்கும் ஏழை மாணவிகளுக்கு வலையை வீசியுள்ளார் ஜெயப்பிரதா.. பண நெருக்கடியில் இருக்கும் தோழிகள் யார் என்று குறி வைத்து, அந்த மாணவிகளுக்கு வலிய சென்று பண உதவி செய்வாராம்.. ஒருகட்டத்தில் அந்த பெண்களால், தாங்கள் வாங்கிய பணத்தை திருப்ப செலுத்த முடியாதபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜெயப்பிரதா பயன்படுத்தி கொள்வாராம்.

விஐபிக்கள் யார்

விஐபிக்கள் யார்

பாலியல் தொழிலில் ஈடுபட்டால் இதே மாதிரி அதிகம் சம்பாதிக்கலாம் என்று தன் தோழிகளிடம் மெல்ல மெல்ல மூளைச்சலைவை செய்வாராம்... இப்படி பேசி பேசியே, அவர்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவாராம். மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகர நகரங்களில் தொழிலதிபர்கள், முக்கிய புள்ளிகள், விஐபிகள், கல்லூரி மாணவிகளை, தங்கள் பாலியல் ஆசைக்காக தேடுவதை அறிந்து, அவர்களிடம் இந்த மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்திருக்கிறார்கள் பிரகாஷூம், ஜெயப்ரதாவும்..

காட்டேஜ்கள்

காட்டேஜ்கள்

இதற்காகவே சொகுசு வீடு, லாட்ஜ்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்திருக்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, "லோகாண்டோ" என்ற வெப்சைட் மற்றும் ஆப் மூலம் விளம்பரப்படுத்தி, பொறியியல் மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார் ஜெயப்ரதா.. பாக்கெட் மணி கிடைக்கும், ஜாலியாக ஊர் சுற்றலாம், ஆடம்பரமாக வாழலாம், விஐபிக்களின் தொடர்பு கிடைக்கும் என்றெல்லாம் அந்த பெண்களின் மனதை கரைத்துள்ளார்.. இதில் கொடுமை என்னவென்றால், தொழிலதிபர்களுக்கு இந்த மாணவிகளை அனுப்பி ரேட் பேசி, 30 ஆயிரம் அல்லது 40 ஆயிரம் பணத்தை ஜெயப்ரதா வாங்கி கொள்வாராம்.. ஆனால், இந்த மாணவிகளுக்கு வெறும் 3000 பணத்தை தந்து மோசடி செய்து வந்துள்ளார்..

கிரேட் எஸ்கேப்

கிரேட் எஸ்கேப்

ஜெயப்பிரதா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், பிரகாஷின் நண்பர் பிரேம் தாஸ் என்பவரும் கைதாகி உள்ளார்.. ஆனால், பிரகாஷ் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. தலைமறைவாகவே இருந்து வருவதால், தனிப்படை அமைத்து அவரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. மாணவிகளை பாலியல் தொழிலில் வளைப்பதற்காகவே, தன்னுடைய காதலியையும், பொறியியல் கல்லூரியில் படிக்க வைத்ததுடன், என்ஜினியரிங் மாணவிகள் பலரையும் விபச்சாரத்தில் தள்ளி லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

 ஜாலி வாழ்க்கை

ஜாலி வாழ்க்கை

பெரும்பாலான தொழிலதிபர்கள் தங்கள் பாலியல் ஆசைக்காக கல்லூரி மாணவிகளை தேடுவதுதான், ஜெயப்பிரதா - பிரகாஷ் ஜோடிக்கு சாதகமாகிவிட்டது.. கல்லூரி மாணவிகளை தொடர்ந்து ஈடுபடுத்தினால் வாழ்க்கை முழுவதும் தேவைப்படும்போதெல்லாம் பணம் கிடைக்கும் என்ற அடிப்படையில்தான், பல பெண்களை நாசமாக்கி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.. லாட்ஜ்கள் தவிர Oyo ரூம்களையும் வாடகை எடுத்து, பாலியல் தொழிலுக்கு இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.. இப்படியே கடந்த 3 வருடமாக போலீஸாரிடம் சிக்காமல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 தூண்டில் மீன்

தூண்டில் மீன்

இப்போது விஷயம் என்னவென்றால், ஜெயப்ரதா செல்போனை போலீசார் ஆராய்ந்தபோது, இவர்கள் மூலம் பாலியல் தொழிலில் சிக்கிய பலரது தகவல்கள், அழைப்புகள் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.. அதுமட்டுமல்ல, ஓலா, உபர் போன்ற தொழில் போல் நெட்வொர்க் அமைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதும், குறிப்பாக 4 சக்கர வாகனங்கள் அதாவது, ஆட்டோக்கள், ஓலா, உபர் போன்ற நிறுவனங்களிடம் அட்டகாசம் செய்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வாடகைக்கு வாகனம் ஓட்டியும் பணம் சம்பாதித்துள்ளனர்... அதற்கான கமிஷன் தொகையை ஓலா, உபர் நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு வாகன டிரைவர்கள் லாபம் சம்பாதித்துள்ளனராம்.. தலைமறைவாக உள்ள பிரகாஷ் சிக்சினால்தான், மேலும் பல விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+