புழல் சிறை கைதி தப்பியது எப்படி? கேபிளை பிடித்து எஸ்கேப்.. அண்ணா நகரில் சுற்றி வளைத்த போலீசார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புழல் சிறையில் இருந்து நேபாள நாட்டைச் சேர்ந்த கைதி தப்பியது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதி சுதீப் போகதி, சிறையின் சுற்றுச்சுவரில் இருந்த சிசிடிவி, தொலைபேசி கேபிள்களைப் பிடித்து ஏறி தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து வழக்கு ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் நேற்று முன்தினம் தப்பி ஓடினர். இது தொடர்பாகப் புழல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

Puzhal jail Escape Nepalese Prisoner Sudip Bogati Scales Wall Using CCTV phone Cables

நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் போகதி மற்றும் மதுரவாயல் காவல் நிலைய வழக்கிற்காகக் கைது செய்யப்பட்ட சுரேஷ் ஆகிய இருவர் புழல் சிறையிலிருந்து தப்பியோடியுள்ளனர். வழக்கமாக மாலை 5 மணிக்கு புழல் வளாகத்திலிருந்து கைதிகள் சிறைக்குள் அனுப்பப்படும்போது, சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய கணக்கெடுப்பில் இந்த 2 கைதிகள் காணாமல் போனது தெரியவந்தது.

அவர்கள் சிறையிலிருந்து எவ்வாறு தப்பினர் என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். புழல் சிறை முழுவதும் பலத்த பாதுகாப்பு, மின்சார இணைப்பு உள்ள நிலையில் அவர்கள் தப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்கள் சமையலறை வழியாகத் தப்பிச் சென்றதாகத் தெரியவந்தது. இந்நிலையில், இன்று சென்னை அண்ணா நகர் பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த சுதீப் போகதி என்பவரைத் தனிப்படை போலீசார் கைது செய்து, மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். மற்றொரு கைதியான சுரேஷை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கைதி சுதீப் போகதி, பாதுகாப்பு நிறைந்த புழல் மத்திய சிறையில் இருந்து தப்பியது எப்படி என்பது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கைதி சுதீப் போகதி, 40 கிலோ மட்டுமே எடை உள்ளதால் சுற்றுச்சுவரில் இருந்த சிசிடிவி, தொலைபேசி கேபிள்களைப் பிடித்து ஏறி தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சொந்த ஊருக்குச் செல்ல பணத்தை ஏற்பாடு செய்வதற்காக அண்ணா நகர் பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில் சுதீப் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரிடம் மீண்டும் பிடிபட்ட சுதீப் போகதி, கதறி அழுததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பிஓடிய விவகாரத்தில் உதவி ஜெயிலர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிறைக் காவலர்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+