சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓமிக்ரானின் BA.2 புதிய வேரியண்ட் பரவுகிறது- தமிழக சுகாதாரத் துறை செயலாளர்

Google Oneindia Tamil News

சென்னை: ஓமிக்ரான் BA.2 என்ற புதிய திரிபு பரவி வருகிறது என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Omicron in Community Transmission Stage in India, says INSACOG | OneIndia Tamil

    கொரோனா கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம் முதல் சீனாவில் முதல்முறையாக பரவியது. இது மெல்ல மெல்ல உலக நாடுகளுக்கும் பரவியது. கிட்டதட்ட 2 ஆண்டுகளாக இந்த கொரோனா இந்த உலகை விட்டு போகாமல் தனது உருவை மாற்றிக் கொண்டே வருகிறது.

    இதனால் கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு உள்ளிட்டவற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளார்கள். இந்த நிலையில் ஏற்கெனவே ஆல்பா, பீட்டா, டெல்டா உள்ளிட்ட புதிய வேரியண்ட்கள் வந்துவிட்டன.

    நேரடியாக தாக்கும்.. ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்படும் புது அறிகுறி.. வல்லுனர்கள் விடுக்கும் வார்னிங்! நேரடியாக தாக்கும்.. ஓமிக்ரான் நோயாளிகளுக்கு ஏற்படும் புது அறிகுறி.. வல்லுனர்கள் விடுக்கும் வார்னிங்!

    தென்னாப்பிரிக்கா

    தென்னாப்பிரிக்கா

    இதில் ஓமிக்ரான எனும் புதிய வேரியண்ட் தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கியது. புதிதாக டெல்சிகிரான், டெல்டாகிரான் ஆகியவையும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த ஓமிக்ரான் திரிபு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 4000 க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பரவியுள்ளது.

    கொரோனா 4ஆவது அலை

    கொரோனா 4ஆவது அலை

    அந்தந்த நாடுகளில் கொரோனா 3ஆவது அலை, 4ஆவது அலை தீவிரமடைய தொடங்கிவிட்டன. இந்த நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஓமிக்ரானின் புதிய வேரியண்ட் பரவி வருவதாக சொல்லப்படுகிறது. அதன் பெயர் BA.2 ஆகும். 40 -க்கும் அதிகமான நாடுகளில் இந்த வேரியண்ட் பரவி வருகிறது.

    40 நாடுகள்

    40 நாடுகள்

    டென்மார்கில் கடந்த 20-ஆம் தேதி பதிவான மொத்த கொரோனா கேஸ்களில் 50 சதவீதம் புதிய வேரியண்ட் கேஸ்கள் ஆகும். பிரிட்டன், டென்மார்க் ஆகிய நாடுகளை தவிர ஸ்வீடன், நார்வே, இந்தியாவிலும் இந்த புதிய வேரியண்ட் BA.2 கண்டறியப்பட்டுள்ளது. இது ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் கூட சிக்குவதில்லை என கூறப்படுகிறது.

    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி

    இந்த நிலையில் ஓமிக்ரான் பிஏ.2 குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் இந்த புதிய வேரியண்ட் BA.2 கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    English summary
    TN Health Secretary Radhakrishnan says that new variant BA.2 is spreading more fast than Omicron.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X