இந்தியாவில் ரெண்டே ரெண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க! மோடி, அமித்ஷா பேரை சொன்ன ராதாரவி.. பாஜகவினர் ஷாக்
சென்னை: இந்தியாவிலேயே இரண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க. ஒருவர் மோடிஜி , இன்னொருவர் அமித்ஷா என கூறி பாஜகவினரை சற்று குழப்பியடித்தார் ராதாரவி.
Recommended Video
திமுகவை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார்.
இதுகுறித்து ராதாரவி பேசுகையில் அண்ணாமலை நான் பழைய ஆளாக ஆனால் என்னவாகும் தெரியுமா, அண்ணாமலைக்கு தெரியாது, ஆனால் எனக்கு தெரியுமே. நான் என்ன சொல்றேன், எங்கள் அண்ணாமலை பழைய ஆளாக ஆனால் என்ன பண்ணுவீங்க.

கர்நாடகா
பாஷை தெரியாத கர்நாடகாவிலேயே கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் ராதாரவி. தற்போது நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலும் பாஜகவா திமுகவா எனும் நிலை வரும். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் எம்பி தேர்தலில் பாஜகவே வென்று மத்தியில் ஆட்சி செய்யும். மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ந்தது போல் தமிழகத்திலும் வரும்.

மசியாத இயக்கம்
எதற்கும் மசியாத ஒரே இயக்கம் பாஜக மட்டும்தான். அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் பேச்சுகளை நான் கேட்டுள்ளேன். ஆனால் இந்த அண்ணாமலையை போல் சொந்த பேச்சு திறமை கொண்டவரை நான் பார்த்ததே இல்லை. திமுக வெற்றியை நோக்கி போவதாக நினைக்கிறார்கள். ஆனால் இந்த வெற்றிதான் தோல்வியை நோக்கி செல்கிறது.

அண்ணாமலைதான் முதல்வர்
எனக்கு சகட்டுமேனிக்கு பேசித்தான் பழக்கம். அண்ணாமலை தான் அடுத்த முதல்வர். காசு கொடுத்து கூடும் கூட்டம் பாஜக இல்லை. தானா சேர்ந்த கூட்டம். கருணாநிதி குடும்பத்திலிருந்து முதல்வராக ஸ்டாலின் வந்துள்ளது எனக்கு சந்தோஷம்தான். மகாராஷ்டிராவில் ஆப்பு வைத்தோமே பார்த்தீர்களா. ஆனால் நம்ம கட்சியை சேர்ந்த பட்னவீஸ் முதல்வர் பதவிக்கு ஆசைப்படாமல் துணை முதல்வராக பொறுப்பேற்றது அவரது பெருந்தன்மை.

ரெண்டு அக்யூஸ்டு
இந்தியாவில் ரெண்டு அக்யூஸ்டுங்க இருக்காங்க. பெரிய அக்யூஸ்டுங்க. ஒன்னும் மோடி ஜி இன்னொன்னு அமித்ஷா. நீங்கள் பத்தாயிரம் தடவை ஒன்றிய அரசு என சொன்னாலும் சரி , 10 ஆயிரம் தடவை திராவிட மாடல் என சொன்னாலும் சரி அவங்க ரெண்டு பேரும் கண்டுக்கவே மாட்டாங்க.

அதிமுகவின் பலம் என்ன?
வரும் தேர்தலில் பாஜக 160 தொகுதியில் நின்றால் 140 தொகுதிகளில் வெற்றி பெறும். இதைக்கேட்டு அதிமுக கோபப்படக் கூடாது. தனது பலம் என்ன? பலவீனம் என்ன? என்று அதிமுக தெரிந்துகொள்ள வேண்டும் என ராதாரவி பேசியிருந்தார். அதிமுகவுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் முடிவில் பாஜக தலைமை இருக்கும் போது ராதாரவி இப்படி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications