இன்று புதுச்சேரி.. அடுத்து தமிழ்நாடுதான்... விரைவில் பார்ப்பீர்கள் - ராகுல் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி
புதுச்சேரியைப் போன்று தமிழ்நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று ராகுல்காந்தியின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி அளித்துள்ளார்.
சென்னை: விரைவில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமரும் என்று பாஜக தலைவர்அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் பக்கம் நிற்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் லோக்சபாவில்நேற்று நடைபெற்றது. இதில் பேசிய ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரை நாட்டின் தலைமைக்கான உரையாக இல்லாமல் அரசு அதிகாரிகள் கொடுத்த தகவலாக இருப்பதாக குறிப்பிட்டார்.
வாழ்நாளில் ஒரு போதும் தமிழ்நாட்டில் உங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது எனவும், தமிழ்நாட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். தமிழகம் பற்றி அதிகம் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு நானும் தமிழன்தான் என்றும் தெரிவித்தார் ராகுல்காந்தி.

ராகுல் காந்தி ஆவேசம்
லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது, நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். இந்த விவகாரத்தில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது வாழ்நாளில் ஒரு போதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது என்று தெரிவித்தார். அனைத்து மாநில மக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாசாரம் ஆகியவை தனித்துவம் வாய்ந்தவை, அவற்றுக்கு மத்திய அரசு மதிப்பு அளித்து சம உரிமை வழங்க வேண்டும் என்று ஆவேசமாக பேசியிருந்தார் ராகுல்காந்தி. அதற்கு பதிலடி தரும் வகையில் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை ட்வீட்
ராகுல்காந்தியின் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், வரலாற்றை ஒருபோதும் மறக்க வேண்டாம் என்றும், இலங்கை தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளுக்கும், ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கும் காங்கிரஸ் கட்சியே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐசியுவில் காங்கிரஸ்
திமுக கொடுக்கும் ஆக்சிஜன் உதவியோடு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஐசியுவில் இருப்பதாகவும் அண்ணாமலை கிண்டலடித்துள்ளார். புதுச்சேரியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், பிரதமர் மோடியின் உன்னத நோக்கத்தை புதுச்சேரி மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
Recommended Video

அடுத்து தமிழ்நாடுதான்
தமிழ்நாட்டு மக்களும் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் பக்கம் நிற்பதாகவும், விரைவில் தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கட்டிலில் அமரும் எனவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே குஷ்பு புதுச்சேரியில் பாஜக ஆட்சி நடப்பதாக பதிவிட்டிருந்தார். அண்ணாமலையும் புதுச்சேரியில் பாஜக ஆட்சி நடப்பதாக தெரிவித்துள்ளார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications