தமிழ்நாட்டில் இன்று இரவு இடி மின்னலுடன் கொட்ட போகும் மழை.. டெல்டா வெதர்மேன் பகிர்ந்த குட்நியூஸ்
சென்னை: வரக்கூடிய 2 மணி நேரங்களில் இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பொழியும். இன்று மாலை/இரவு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையை எதிர்ப்பார்க்கலாம் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எல் லினோ தாக்கம் இந்த ஆண்டு மோசமாக இருக்கிறது. பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனது.கடந்த மாதம் சுத்தமாக ஒரு சொட்டுக்கூட மழை பெய்யாத மாவட்டங்கள் பல இருக்கின்றன. தென்மாவட்டங்கள் தான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. வடமாவட்டங்களில் ஓரளவு மழை அவ்வப்போது பெய்து இருந்தாலும் அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.. கோடைகாலத்தில் உள்ளது போன்ற புழுக்கம் வடமாவட்டங்களில் அதிகமாக உள்ளது. எப்போது ஜில்லென்று இருக்கும் ஊட்டி, கொடைக்கானல் கூட போதிய மழை இல்லாமல் தவிக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் போதிய மழை இல்லாததால் தண்ணீருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தென்மேற்கு பருவ மழை தமிழ்நாட்டை பெரிய அளவில் ஏமாற்றி உள்ளது. காவிரி நீரை நம்புயுள்ள மயிலாடுதுறை, திருவாரூர்,நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், காரைக்கால் (புதுச்சேரி), திருச்சி,புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாமல் மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்க முடியவில்லை..
எப்போதுமே வற்றாமல் ஓடும் தாமிரபரணி கூட தண்ணீர் போதிய அளவில் இல்லாமல் பரிதவித்து கிடக்கிறது. வைகையை நம்பியுள்ள, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. வெறும் 40 அடி தான் வைகையில் தண்ணீர் இருக்கிறது. வடகிழக்கு பருவ மழை தான் இப்போது உள்ள ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த சூழலில் தென்மேற்கு பருவ மழையின் இறுதி காலமான இந்த மாதத்தில் அவ்வப்போது பல்வேறு உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இதுபற்றி டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் இன்று பிற்பகல் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "கீழ்திசை காற்றின் ஊடுருவல் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை மேகங்கள் உருவாக துவங்கியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, திருவாரூர், நன்னிலம் சுற்றுவட்டாரங்களிலும், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் சுற்றுவட்டாரங்கள், விழுப்புரம் மாவட்டம் பண்ருட்டி வடக்கு, வீடுர், திண்டிவனம் சுற்றுவட்டாரங்கள், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட புறநகர் பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
வரக்கூடிய 2 மணி நேரங்களில் இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழை பொழியும்.
இன்று மாலை/இரவு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையை எதிர்ப்பார்க்கலாம். முக்கிய குறிப்பு: மழையின் போது இடி,மின்னல் வலுவாக இருக்கும் தயவு செய்து மரங்களுக்கு அடியில்,பெரிய கட்டிடங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம்" இவ்வாறு டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
