சென்னையில் 24 மணி நேரத்தில் மழை.. 5 நாட்களுக்கு தமிழக வானிலை எப்படி இருக்கும்? வெளியானது அறிவிப்பு
சென்னை: சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையத்தின், ஏரியா புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாள் 1 (02.01.2021) கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Recommended Video

நாள் 2 (03.01.2021) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல் பகுதியில் சில இடங்களில் லேசான மிதமான மழை முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாள் 3 (04.01.2021) கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
நாள் 4 (05.01.2021) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல் பகுதியில் சில இடங்களில் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாள் 5 (06.01.2021) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கல் பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையுடன், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கன மழை எச்சரிக்கை: 05.01.2021 மற்றும் 06.01.2021 நாட்களில், கடலோர தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி, மின்னல் எச்சரிக்கை: 02.01.2021 & 03.01.2021: தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்தில் வானிலை பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 28 டிகிரி செல்சியஸ் மற்றும் 24 டிகிரி செல்சியசாக இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 29 டிகிரி செல்சியஸ் மற்றும் 24 டிகிரி செல்சியசாக இருக்கும்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications