தவெக எம்எல்ஏ திறந்து வைத்த பள்ளி கட்டிடத்தில்.. ஒரே வாரத்தில் மழைநீர் கசிவு! ஆக்ஷனில் இறங்கிய ஆணையர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மணலி நியூ டவுன் பகுதியில், தவெக எம்எல்ஏ திறந்து வைத்த பள்ளி கட்டிடத்தில் மழைநீர் கசிந்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கட்டிடத்தை ஆய்வு செய்ய குழு நியமிக்கப்படும் என்று மாநகராட்சி சமீரன் கூறியிருக்கிறார்.

சென்னை மணலி நியூ டவுன்,சடையான்குப்பத்தில் உள்ள சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டிடம் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில்.. மழையினால் சுவர்களில் நீர் கசிந்து ஈரமாக மாறியுள்ளது. இது கட்டுமான தரம் குறித்த கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

TVK MLA

இது குறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி கவனம் பெற்றிருக்கிறது. முந்தைய திமுக ஆட்சியின்போது, ரூ. 2.35 கோடி மதிப்பீட்டில் ஏ.கண்ணன் என்ற ஒப்பந்ததாரரால் இந்த புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. அக்டோபர் 14ஆம் தேதி அன்று தமிழக வெற்றி கழகத்தின் மாதவரம் எம்எல்ஏ விஜய பிரபு, இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். தற்போது சென்னையில் பருவமழை தீவிரமடைந்திருப்பதால், நிவாரண நடவடிக்கைகளுக்காக, இந்த பள்ளி கட்டிடம் அவசர கால நிவாரண பொருட்களை சேமித்து வைக்கும் மையமாகவும் பயன்படுத்தப்பட்டது.

இத்தனை நாட்கள் பழைய கட்டிடத்தில், வெயிலுக்கும், மழைக்கும், பொத்தல்களுக்கும் பயந்து இருந்த மாணவர்கள், புதிய கட்டிடம் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

அதாவது அக்டோபர் 23 அன்று, செய்தியாளர்கள் பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்ட போது.. பள்ளியின் வெளிப்புற சுவர்கள் ஈரப்பதம் அடைந்திருப்பது தெரியவந்தது. இருப்பினும் உட்புற சுவர்களில் பெரிய பாதிப்பு இல்லை. சுவர்கள் மற்றும் படிக்கட்டுகளில் தண்ணீர் கசிந்து ஒழுகுவதால், பள்ளி கட்டிடத்தில் மின்சார கசிவு அல்லது மின்விபத்துக்கள் ஏற்படுமோ? என்று பள்ளி ஊழியர்களும் பெற்றோர்களும் அச்சம் தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த பள்ளியில் படிக்கும் கிடைத்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களில்.. பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் என்பதால், அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பழைய கட்டிடம் மிகவும் மோசமடைந்து, கூரை ஒழுகியதால்.. அவசரமாக புதிய கட்டிடத்திற்குள் வகுப்பறைகள் மாற்றப்பட்டன. கட்டிடத்தின் கூரை வேலை சில இன்னும் முழுமையாக முடியாததே இந்த தற்காலிக நீர் கசிவுக்கு காரணம் என அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவிக்கையில், இப்பள்ளி கட்டிடத்தை உடனடியாக ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்ப குழு நியமிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

கட்டிடம் திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டாலும் கூட.. முழுமையான ஆய்வு செய்த பின்னர்தான் கட்டிடத்தை திறந்திருக்க வேண்டும். அதை தவெக எம்எல்ஏ செய்யவில்லை என்று விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+