சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினிகாந்த்தால் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி இருக்க முடியும்.. ஆனால்.. குருமூர்த்தி பரபர பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை : திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை தாண்டி ரஜினிகாந்த்தால் தனித்துவமான தலைவராக திகழ்ந்திருக்க முடியும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி 'இந்தியா டுடே கன்க்ளேவ் தெற்கு' விவாத நிகழ்ச்சியில் பேசினார்.

குருமூர்த்தி இதுபற்றி கூறுகையில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் வெற்றிடத்தை ரஜினிகாந்த்தால் நிரப்பியிருக்க முடியும். துரதிஷ்டவசமாக அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்கு முடிவை கைவிட்டுவிட்டார் என்றார்.

ரஜினியை பல வருடங்களாக பார்த்து வரும் தனக்கு அவர் அரசியல் கட்சி தொடங்காமல் கைவிட்டது வியப்பை தரவில்லை என்றார்.

சொல்லிவைத்தார் போல் இந்த அமைச்சர்களுக்கு எல்லாம் வலுவான ஸ்கெட்ச்.. ஸ்டாலின் பலே வியூகம்சொல்லிவைத்தார் போல் இந்த அமைச்சர்களுக்கு எல்லாம் வலுவான ஸ்கெட்ச்.. ஸ்டாலின் பலே வியூகம்

தொடங்குவது கடினம்

தொடங்குவது கடினம்

குருமூர்த்தி மேலும் கூறுகையில், நான் ரஜினியை அரசியலுக்கு இழுக்க முயற்சிக்கிறேன் என்று மக்கள் கருதினார்கள். ஆனால் மாறாக, ஒரு கட்சியை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பதை நான் அவருக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தேன்.

அரசியல் வருகை ரத்து

அரசியல் வருகை ரத்து

உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் அது மிகவும் கடினமாக இருக்கும் என்று ரஜினி கூறினார். இறுதியில் அரசியலுக்கு வரும் முடிவை கைவிடுவெதன சூப்பர் ஸ்டார், அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது மருத்துவர்கள் எடுத்துவிட்டனர்.

துரதிஷ்டவசமானது

துரதிஷ்டவசமானது

நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று மிகவும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்தார். ஆனால்ரஜினிகாந்தின் உடல்நிலை அரசியலில் நுழைய அனுமதிக்காதது துரதிர்ஷ்டவசமானது . இரண்டு திராவிடக் கட்சிகளிடமிருந்து [AIADMK மற்றும் DMK] இருந்து அவர் அவர்களை விடுவிப்பார் என்று மக்கள் எதிர்பார்த்தனர், ஏனெனில் அடிப்படையில் இரண்டுமே ஒரே கொள்கை உடையவைதான், ஒரே மாதிரியானவைதான். .நிச்சயமாக சொல்கிறேன், ரஜினி, திமுக, அதிமுகவிற்கு மாற்றைஉருவாக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது "என்று குருமூர்த்தி வேதனையை வெளிப்படுத்தினார்.

விரும்பியதை செய்ய முடியவில்லை

விரும்பியதை செய்ய முடியவில்லை

ரஜினி அரசியலை விட்டு விலகிய பின்னர் அவரது மனநிலை குறித்து குருமூர்த்தி கூறுகையில், "வெளிப்படையாக, ரஜினி நிம்மதி அடைகிறார், ஆனால் அவர் விரும்பியதைச் செய்ய முடியவில்லை என்பதில் அவர் சோகமாக இருக்கிறார். ஆனால் அவர் அமைதியாக இருப்பவர் அல்ல, ஏனெனில் அவரிடம் உள்ளார்ந்த வேண்டுகோள் மிகவும் வலுவானது மற்றும் சக்தி வாய்ந்தது" என்றார்.

English summary
Gurumurthy said that it was unfortunate that Rajinikanth had to drop the idea of launching a political party as he could have replaced the icon-void left by J Jayalalithaa and M Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X