நடிகையின் காலில் விழுந்த ரஜினிகாந்த்.. விருது விழாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மூத்த நடிகை காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார். நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு கலாசார மேன்மைக்கான டாக்டர் திருமதி ஒய்ஜிபி விருதை வழங்கினார் ரஜினிகாந்த். அப்போது வைஜெயந்தி மாலாவின் காலில் விழுந்து நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார். மேலும், அவரை வெகுவாகப் பாராட்டி மேடையில் பேசினார்.
தமிழ் நாடக ஆசிரியர் ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியும், கல்வியாளருமான மறைந்த ராஜலட்சுமி நூற்றாண்டு விழா, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. ஒய்.ஜி.பார்த்தசாரதி - ராஜலட்சுமி தம்பதியரின் மகனும், நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன் - சுதா, பேத்தி மதுவந்தி ஏற்பாட்டில் இந்த விழா நடந்தது.

சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு, கலாச்சார மேன்மைக்கான விருதை வழங்கி கவுரவித்தார். . அப்போது வைஜெயந்தி மாலாவின் காலில் விழுந்து நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார். மேலும், அவரை வெகுவாகப் பாராட்டி மேடையில் பேசினார்.
வேல்ஸ் கல்வி குழும நிறுவனர் ஐசரி கணேஷ், ரஜினிகாந்தின் மனைவி லதா, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், பரதநாட்டிய கலைஞர்கள் பத்மா சுப்பிரமணியன், ஷோபனா, பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், வயலின் இசைக்கலைஞர் லால்குடி கிருஷ்ணன், தொழில் அதிபர் ரவி வெங்கட்ராமன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்.
இந்திய அரசின் 3வது மிக உயரிய விருதாக கருதப்படும் பத்மபூஷன் விருது பெற்றவர் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா. சினிமா நடிகையாக மட்டுமல்லாமல் பரத நாட்டிய கலைஞராகவும் அறியப்படுகிறார். 1949 ஆம் ஆண்டு வெளியான 'வாழ்க்கை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். குறிப்பாக 'தேவதாஸ்' படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். எம்ஜிஆர் உடன் பாக்தாத் திருடன், ஜெமினியுடன் வஞ்சிக்கோட்டை வாலிபன், சிவாஜியுடன் இரும்பு திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் குடும்ப மருத்துவர் சமன்லால் பாலியை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சினிமாவிலிருந்து விலகினார். காங்கிரஸ், பாஜக என வெவ்வேறு அரசியல் கட்சிகளில் தனது பயணத்தை தொடர்ந்தார். வைஜெய்ந்தி மாலாவுக்கு தற்போது வயது 91.
-
பாரதிராஜா உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்! அமைச்சர் ராஜ்மோகன் தகவல் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
சொந்த மண்ணை நோக்கி தொடங்கியது பாரதி ராஜாவின் இறுதி பயணம்! நாளை முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications