ரசிகரின் மருத்துவ செலவு முழுவதையும் பார்த்துக்கொண்ட ரஜினிகாந்த்.. உருகிய சுதாகர்.. ஃப்ளாஷ்பேக்!
சென்னை : ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகரின் மறைவு ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வி.எம்.சுதாகர் சிறுநீரகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது மருத்துவச் செலவு முழுவதையும் ரஜினிகாந்த்தே கவனித்துக் கொண்டார். இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் நெகிழ்ச்சிகரமாக
அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்திற்கென்று தமிழ்நாடு முழுவதும் முழுவதும் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என்று நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இயங்கி வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று காலமானார்.
சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகி வி.எம்.சுதாகர் உயிரிழந்ததை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வி.எம்.சுதாகர்
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகியாகச் செயல்பட்டு வந்தவர் ரஜினியின் நீண்டகால நண்பரான வி.எம்.சுதாகர். உடல் நலக்குறைவு காரணமாக அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்குப் பதில் மன்றப் பணிகளை ரஜினிகாந்த்தின் நண்பர் சுதாகர் பல ஆண்டுகளாக கவனித்து வந்தார். ரஜினி நற்பணி மன்றம் தொடர்பான எல்லா அறிவிப்புகளையும் சுதாகரே வெளியிட்டு வந்தார். இவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் காலமானார்.

ரஜினி அதிர்ச்சி
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகரின் மறைவு நடிகர் ரஜினிகாந்த்துக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ரஜினிகாந்த், "என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரஜினி ரசிகர்களும் சுதாகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிகிச்சைக்கு உதவவில்லையா
ரஜினிகாந்த்தின் நீண்டகால நண்பரான சுதாகர் மக்கள் மன்றத்தின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவருக்கு ரஜினிகாந்த் எந்த உதவியும் செய்யவில்லை என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ரஜினிகாந்த் உதவி செய்யாததால், சுதாகரின் சிகிச்சைக்காக நிதி வசூலிக்கப்படுவதாக தகவல் பரவியது. இதுகுறித்து அப்போது ட்விட்டர் பதிவு வாயிலாக விளக்கம் அளித்தார் சுதாகர்.

எல்லா செலவையும் பார்த்துக்கொண்டார்
"தலைவர் ரஜினிகாந்தின் அபரிமிதமான நன்மதிப்பைக் குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்ப் பிரச்சாரம் உலா வருகிறது. இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான கடந்த ஒரு வருட மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் ரஜினிகாந்த். இப்போது வரை அவர் மட்டுமே நிதி மற்றும் தார்மீக ஆதரவை வழங்குகிறார். அதற்காக எங்கள் முழு குடும்பமும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

சுதாகர் உருக்கம்
எனது சிகிச்சைக்கான நிதி சேகரிக்கும் பிரச்சாரத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல், அவர்களால் முடிந்த நிதியுதவியை வழங்குவதற்காக தொடங்கினார்கள். ரஜினிகாந்த் எங்களுக்கு உதவாததால் இது தொடங்கப்பட்டது என்ற செய்தி போலியானது. இது ரஜினியின் நல்லெண்ணத்தையும், குணத்தையும் பாதித்துள்ளதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்" என சுதாகர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சுதாகரின் மறைவுக்கு ரஜினி ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications