உடல்நிலை சரியில்லை.. 30 நாள் பரோல் தாங்க.. ராஜீவ் கொலை வழக்கு ராபர்ட் பயஸ் முதல்வருக்கு கடிதம்!
சென்னை: உடல்நலம் சரியில்லை எனக்கூறி 30 நாள் பரோல் கோரி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு இந்தியாவை உலுக்கியது. இந்த வழக்கில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அதனை உச்ச நீதிமன்ற ரத்து செய்தது.

பேரறிவாளன் விடுதலை
இதற்கிடையே தான் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை கடந்த மே மாதம் விடுதலை செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றநீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா தீர்ப்பை வாசித்தனர். அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டனர். மேலும், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

ரவிச்சந்திரன்-நளினி வழக்கு
இதற்கிடையே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனக்கூறிய ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அம்சங்களை அம்மனுவில் சுட்டிக்காட்டியுள்னள. மேலும் இடைக்காலமாக பேரறிவாளனுக்கு வழங்கியதைப் போல தங்களையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது.

பரோல் கோரி கடிதம்
இந்நிலையில் தான் சென்னை புழல் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். நிலையில் 30 நாள் பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். இவர் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் உள்ள நிலையில் தற்போது பரோல் கேட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.மேலும் 7 பேர் விடுதலையை தொடர்பான தீர்மானத்துக்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது வருத்தமளிக்கிறது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

2019க்கு பிறகு
இதற்கு முன்பு கடந்த 2019ல் ராபர்ட் பயஸ் 30 நாள் பரோலில் சென்றார். அவரது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை ஏற்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பரோலில் சென்றார். அதன்பிறகு சிறை சென்ற அவர் தற்போது 2வது முறையாக பரோல் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications