உட்கார்ந்துட்டே ராஜ்மோகனுக்கு வணக்கம் வைத்த ரம்யா கிருஷ்ணன்.. 2 குரூப்பாக கிளம்பி வந்த நெட்டிசன்கள்
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் தொடர்பான வீடியோ ஒன்று வைரலான நிலையில், அவரது செயல் குறித்து சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் கருத்துக்களை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.. ஒரு தரப்பினர் ரம்யா கிருஷ்ணனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், இன்னொரு தரப்பினர் பொது நிகழ்ச்சியில் அமைச்சருக்கு உரிய மரியாதை அளித்திருக்க வேண்டும் என விமர்சித்து வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டார்.. அப்போது அமைச்சர் வந்தபோது பலரும் எழுந்து நின்ற நிலையில், ரம்யா கிருஷ்ணன் தனது சீட்டில் உட்கார்ந்தபடியே வணக்கம் தெரிவித்துவிட்டு, பிறகு கால்மேல் கால் போட்டபடி அருகில் இருந்த நடிகையுடன் பேச்சை தொடர்ந்தார்.. இந்த போட்டோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றது.

ரம்யா கிருஷ்ணன்
நடிகை ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தின் நீலாம்பரி ஸ்டைலில் நடந்துகொண்டதாகக் கூறி, அவரது போட்டோவை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். "நீலாம்பரி ஸ்டைலில் கவனித்துவிட்டார்" என சிலர் கமெண்ட் செய்ய, இந்த விவகாரம் தொடர்பாக நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரு தரப்பாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ரம்யா கிருஷ்ணன் உட்கார்ந்தபடியே வணக்கம் தெரிவித்தது குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள சிலர், "வணக்கம்தான் வைத்தார்களே.. இதில் என்ன தவறு?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஒருவரோ, "மேடமுக்கு தெரிந்திருக்கிறது யாருக்கு எவ்வளவு மரியாதை தர வேண்டும் என்று" என்று ரம்யா கிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
உட்கார்ந்துட்டே வணக்கம்
மேலும் சிலர், "மனிதருக்கு மனிதர் வந்தால் எழுந்து கும்பிட வேண்டும் என்ற எந்த ஒரு சட்டமும் இல்லையே" என்று குறிப்பிட்டு, ஒருவர் எப்படி உட்கார வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். "அவருடைய உரிமை.. அவர் காலை மேலே வைத்து உட்காருவதில் என்ன தவறு?" என்றும் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, ரம்யா கிருஷ்ணனின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையிலும் பல கருத்துகள் பதிவாகி வருகின்றன. "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரை மதியுங்கள்.. அப்போதுதான் உங்களுக்கு அது அழகு" என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இன்னொருவரோ, "அவங்க பெரிய நடிகையாக இருக்கட்டும்.. ஆனால் ஒரு அமைச்சருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ஒரு பொம்பளைக்கு அடக்கம் வேண்டும்
மற்றொரு நெட்டிசன், "ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிரு இருக்கக்கூடாது.. அடக்கம் வேண்டும், அகம்பாவம் இருக்கக்கூடாது" என்று அதே படையப்பா படத்தில் ரஜினி சொல்லும் டயலாக்கை பதிவிட்டுள்ளார்.. அதேபோல், "அடக்கம் அமரருள் உய்க்கும்.. அடங்காமை ஆறிருள் உய்த்து விடும்" என்ற பழமொழியையும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
ஒருசிலர், "படையப்பா படத்தில் கூட ரம்யா கிருஷ்ணனுக்கு நீலாம்பரி கேரக்டர் சரியாக இருந்ததோ இல்லையோ தெரியவில்லை.. ஆனால் இப்போது பட்டையை கிளப்பிவிட்டது.. செம மாஸ்" என்று குறிப்பிட்டு வருகிறார்கள்..
இப்படி ஒரே போட்டோவை வைத்துக்கொண்டு, நெட்டிசன்கள் 2 தரப்பாக பிரிந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இதை இயல்பான விஷயமாக பார்க்கும் நிலையில், இன்னொரு தரப்பினர் பொது நிகழ்ச்சிகளில் கடைபிடிக்க வேண்டிய மரியாதை மற்றும் பண்பாடு குறித்து கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.. இதனால் ரம்யா கிருஷ்ணன் தொடர்பான இந்த விவகாரம் இன்று 2-வது நாளாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது..!!


Click it and Unblock the Notifications
