மறைந்த மனிதநேயம்? பெட்ரோல் இன்றி நின்ற ரேபிடோ பைக்.. இறங்க மறுத்த பயணி.. தள்ளியபடியே சென்ற கேப்டன்
ஐதராபாத்: ஐதராபாத்தில் ரேபிடோ பைக் ஒன்று பெட்ரோல் இன்றி நடுவழியில் நின்றது. எனினும் அதில் பயணித்து வந்த நபர் என்னால் இறங்க முடியாது என்று ஸ்ட்ரிக்ட் ஆக கூறியதால், அந்த பயணியை பைக்கில் உட்கார வைத்தபடியே ரேபிடோ டிரைவர் பைக்கை தள்ளி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் கார், ஆட்டோ உள்ளிட்டவற்றை ஆன்லைன் செயலி மூலம் புக்கிங் செய்து பயணிகள் பயணம் செய்கிறார்கள். அதேபோல் ரேபிடோ செயலி மூலம் பைக்குகளையும் புக்கிங் செய்து பயணிக்கலாம். கார், ஆட்டோக்களில் செல்வதை விட இதில் வாடகை கட்டணம் பலமடங்கு குறைவு என்பதால் பலரும் இதில் பயணிக்கவே விரும்புகிறார்கள்.

வாகன நெரிசலிலும் அதிகம் சிக்காமல் பைக்குகளில் செல்வதால் ரேபிடோ புக் செய்து பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை நகரங்களில் அதிகமாக உள்ளது. இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு இயக்க அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் சென்னை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா போன்ற நகரங்களில் அதிக அளவு ரேபிடோக்கள் பயன்பாட்டில் இருப்பதை காணமுடிகிறது.
நடுவழியில் நின்ற ரேபிடோ: ஆனால், சில நேரங்களில் ரேபிடோ ஓட்டும் நபர்கள் மற்றும் பயன்படுத்தும் பயணிகள் என இரு தரப்புமே பாதிக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இது குறித்த பதிவுகளை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பார்க்க முடியும். அந்த வகையில்தான் தற்போது ஐதராபாத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
ஐதராபாத்தில் நபர் ஒருவர் ரேபிடோ பைக்கை புக் செய்து இருக்கிறார். புக்கிங்கை எடுத்து இருந்த ரேபிடோ கேப்டன் அந்த நபர் புக் செய்த இடத்திற்கு அவரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். எனினும், செல்ல வேண்டிய இடம் வருவதற்கு முன்பாக பைக் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டது. இதனால், அருகில் தான் பெட்ரோல் பங்க் இருக்கிறது. அதுவரை கொஞ்சம் நடந்து வாருங்கள்.
நெட்டிசன்கள் விமர்சனம்: பெட்ரோல் போட்டுவிட்டு பைக்கில் சென்றுவிடலாம் என்று ரேபிடோ பைக் ஓட்டிவந்த நபர் சொல்லியிருக்கிறார். ஆனால் இதை ஏற்க மறுத்த அந்த ரேபிடோ ரைடரோ.. தன்னால் இறங்கி நடக்க முடியாது என்று கூறியதோடு... இப்படியே செல்லுங்கள் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால், வேறு வழியின்றி அந்த நபரை பைக்கில் அமர வைத்துக்கொண்டே ரேபிடோ கேப்டன் வண்டியை தள்ளி சென்றுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், கொஞ்சமாவது இரக்க குணத்துடன் நடந்து கொள்ளுங்கள்... ரேபிடோ, உடனடியாக இந்த வாடிக்கையாளரை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications