எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி உதயகுமார் நியமனம்..எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் எதிர்கட்சித்துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சென்னை: ஓ.பன்னீர் செல்வத்தைப் பற்றி மேடைக்கு மேடை பேசிய முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.பி. உதயகுமாருக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவியை கொடுத்து அழகு பார்த்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. கோபத்தில் உள்ள ஒரு சமூகத்து மக்களை சமாதானப்படுத்தும் வகையில் பதவிகளை வழங்கி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவில் கடந்த 1 மாதகாலமாக உட்கட்சி பூசல் பிரச்சினை நீடித்தது. அதிமுக அலுவலகத்தில் நடந்த சண்டையால் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையே போர்க்களமானது. நடந்த களேபரத்தால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அன்றைய தினமே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகளை எல்லாம் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பறித்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி.

ஒருங்கிணைப்பாளர் நான்தான்
என்னதான் எடப்பாடி பழனிச்சாமி பல தீர்மானங்களை நிறைவேற்றி ஓ.பன்னீர் செல்வத்தின் பதவியை பறித்ததாக கூறினாலும் தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். தனக்குரிய ஒருக்கிணைப்பாளர் அதிகாரத்தைப் பயன்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக அறிவித்து வருகிறார்.

ஒற்றைத்தலைமையாக இபிஎஸ்
அதிமுகவின் ஒற்றைத்தலைமையாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள எடப்பாடி பழனிச்சாமியோ கட்சியில் வரிசையாக நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறார். துணைப்பொதுச்செயலாளர்களாக நத்தம் விஸ்வநாதன், கே.பி முனுசாமி ஆகியோரை அறிவித்தார். கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்துள்ளார்.

ஒரே சமூகத்தினருக்கு பதவி
ஓ.பன்னீர் செல்வத்தின் பதவியை பறித்த காரணத்தால் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. பலரும் தங்களின் செல்போன்களில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான ஸ்டேட்டஸ்களை வைக்க ஆரம்பித்து விட்டனர். அதிமுகவில் உள்ள அந்த சமூதாய மக்களை சாந்தப்படுத்தவே திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதனுக்கு பதவியைக் கொடுத்துள்ளார்.

எதிர்கட்சித்துணைத்தலைவர் பதவி
இதனிடையே ஓ.பன்னீர் செல்வம் தற்போது வகித்து வரும் எதிர்கட்சித்துணைத்தலைவர் பதவியை பறித்து நத்தம் விஸ்வநாதனுக்கு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவருக்கு ஏற்கனவே கட்சியில் பதவி அளித்துள்ளதால் முன்னாள் அமைச்சரும் தற்போதைய திருமங்கலம் தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.பி. உதயகுமாருக்கு எதிர்கட்சித்துணைத்தலைவர் பதவியை கொடுத்துள்ளார். எதிர்கட்சி துணைத்தலைவர் தேர்வு பற்றி பரிந்துரையை விரைவில் சட்டசபை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி அனுப்பி வைக்க உள்ளதாகவும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

ஓபிஎஸ் கடிதம்
இதனிடையே தமிழக சட்டசபை சபாநாயகருக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். அந்த கடிதம் பரிசீலனையில் இருப்பதாக கூறியுள்ளார் சபாநாயகர் அப்பாவு. எதிர்கட்சித்துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டால் என்ன செய்யப்போகிறார் ஓ.பன்னீர் செல்வம் என்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மாவட்டத்திற்கு முக்கியத்துவம்
ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதால் தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமாகி விட்டதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. எனவே தென் மாவட்டங்களில் அதிமுகவை பலப்படுத்தவும் ஓ.பன்னீர் செல்வத்தை சார்ந்த சமூகத்தினரை சமாதானப்படுத்தவும் தேடி தேடி பதவியை கொடுத்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஒரு மனதாக தேர்வு
கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்கட்சித்துணைத்தலைவராக ஆர்.பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டசபை துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
-
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தர்மபுரி முதல் பெரம்பூர் வரை! பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications