ஓபிஎஸ் அணியில் மீண்டும் மைத்ரேயன்.. சூதானமா இருங்க.. "டெல்லி" அட்வைஸ்.. பரபரப்பு பின்னணி என்ன?
சென்னை: எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்த முன்னாள் எம்பி மைத்ரேயன் திடீரென ஓபிஎஸ் பக்கம் மீண்டும் தாவியது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தர்மயுத்தம் தொடங்கிய காலத்திலிருந்தே ஓபிஎஸ் அணியில் இருந்தவர் மைத்ரேயன். இவர் அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னிருந்து நடத்தியவர். பின்னர் இரு அணிகளும் இணைந்தாலும் ஓபிஎஸ்ஸுக்கும் எடப்பாடிக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது என்பதை சூசகமாக தெரிவித்தவர் மைத்ரேயன்.
ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்த போது கூட ஓபிஎஸ்ஸுடன் பக்கபலமாக இருந்து அனைத்து ஆலோசனைகளிலும் கலந்து கொண்டவர். இந்த நிலையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு நடந்தது.

ஜூன் 22 ஆம் தேதி இபிஎஸ்
அந்த கூட்டத்திற்கு முதல் நாள் அதாவது ஜூன் 22 ஆம் தேதி திடீரென எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து பொதுக் குழு அன்று மேடையில் உட்கார்ந்திருந்த மைத்ரேயனுக்கு ஓபிஎஸ் வணக்கம் தெரிவித்த போது அவர் முகத்தில் சிறியதொரு சங்கடம் தெரிந்தது.

அக்டோபர் 8 இல் ஓபிஎஸ் அணி
இந்த நிலையில் சரியாக 108 நாட்களுக்கு பிறகு சென்னையில் நடந்த மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் ஓபிஎஸ் முன்னிலையில் மைத்ரேயன் மீண்டும் அதே அணிக்கு வந்துவிட்டார். அப்போது அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை ஓபிஎஸ்ஸுக்கு மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் நான் இந்த அணிக்கே மீண்டும் திரும்பியுள்ளேன் என்றார்.

அதிமுகவிலிருந்து நீக்கம்
இந்த நிலையில் நேற்றைய தினம் அதிமுக இடைக்கால பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், அதிமுகவின் அமைப்பு செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மைத்ரேயன் விடுவிக்கப்படுகிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிமுக நிர்வாகிகள்
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது மைத்ரேயன் அதிமுகவில் இருந்தாலும் தாய் கட்சியான பாஜகவுடன் நெருக்கமாகவே இருக்கிறார். இன்றளவும் ஒரு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி தனது வீட்டில் கொண்டாட்டத்தை மோடியின் ட்விட்டர் ஹேண்டிலுக்கும் சேர்த்து அனுப்பக் கூடியவர். அவருடைய ட்வீட்களை எடுத்து பாருங்கள். பெரும்பாலான ட்வீட்கள் பாஜக மூத்த தலைவர்களுக்கு டேக் செய்யப்பட்டிருக்கும்.

டெல்லி எம்பி
டெல்லியில் எம்பியாக இருந்த போதும் சரி இப்போதும் சரி பாஜக தலைவர்களுடனான நெருக்கம் என்பது மைத்ரேயனுக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அனேகமாக அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பின் போது அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

என்ன நடந்தது
இதை பாஜக மூத்த தலைவர்கள் எப்படியும் மைத்ரேயனுக்கு கூறியிருந்திருப்பவர். மேலும் எடப்பாடி பழனிசாமி மீது நிறைய ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. முக்கியமாக கொடநாடு கேஸ் இருக்கிறது. அதுகுறித்து நடவடிக்கை எடுத்தால் எடப்பாடி பழனிசாமி க்கு எதிராக இருக்கும். எனவே இப்போதே சூதானமாக இருந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தியிருந்திருக்கலாம். அதனால் அவர் திடீரென ஓபிஎஸ் அணிக்கு வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications