கடலூர், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..சூறாவளி வீசும்..மீனவர்களும் கவனம்
சென்னை: வங்கக் கடலில் வலுவடைந்துள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்றைய தினம் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்,
கடந்த 24 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழைபெய்துள்ளது. 21 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதாக கூறினார். அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 11 செமீ மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தமிழகம் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும். தமிழகம் புதுச்சேரி இடையே கரையைக் கடந்து அரபிக்கடலுக்கு செல்லும் இதன் காரணமாக அடுத்து வரும் 3 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications