ஹோல்சேல் ரேட்டில் 916 தங்கம்.. விஜய் சேதுபதி, சிம்ரன் சொல்லும் ரீகல் ஜுவல்லர்ஸின் மாற்றம் என்ன
சென்னை: லீடிங் நகை உற்பத்தியாளரான ரீகல் ஜுவல்லர்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் முதன்முறையாகக் காலடி எடுத்து வைக்கிறது. சென்னை தி.நகரில் ஜூலை 31 அன்று திறக்கப்படவுள்ள இந்த புதிய ஷோரூம், நேரடியாக மொத்த விலையில் நகைகளை வழங்கி வாடிக்கையாளர்களின் அனுபவத்தில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கவுள்ளது. அதுமட்டுமல்ல, இந்த திட்டங்கள் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்க இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது...!!
தென்னிந்தியாவின் முன்னணி நகை உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனை நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் ரீகல் ஜுவல்லர்ஸ் நிறுவனம், தமிழ்நாட்டில் தனது முதல் ஷோரூமைத் திறந்து பிசினஸ் ஆரம்பித்துள்ளது. சென்னை தியாகராய நகரில் ஜூலை 31 அன்று இந்த புதிய கிளை அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட உள்ளது.

சுமார் 48 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியம் கொண்டது ரீகல் ஜுவல்லர்ஸ் நிறுவனம்.. எந்த சமரசமும் இல்லாத அணுகுமுறையால் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இப்போது தமிழ்நாட்டிற்குள்ளும் நுழைந்துள்ளது.. பிரபலங்கள் விஜய் சேதுபதி மற்றும் சிம்ரன் இருவரையும் தன்னுடைய தமிழ்நாட்டிற்கான பிராண்ட் அம்பாசிடர்களாக நியமித்துள்ளது.
விஜய் சேதுபதி, சிம்ரன்
அதுமட்டுமல்ல, "இந்த மாற்றம்... அது நல்லதுதானே?" என்ற பிரத்யேக விளம்பர வாசகத்துடன் தனது திறப்பு விழாவை அறிவித்துள்ளது. சான்றளிக்கப்பட்ட HUID 916 ஹால்மார்க் பெற்ற நகைகளை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக கஸ்டமர்களுக்கு மொத்த விலையில் வழங்குவதுதான் ரீகல் ஜுவல்லர்ஸின் ஸ்பெஷாலிட்டியாகும்..
புரோக்கர்கள் யாருமில்லாமல், உற்பத்தியாளரிடமிருந்து நேரடியாக நகைகளை வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்க போகிறதாம்.. அதிகமான டிசைன்கள், புதிய கலெக்ஷன்கள் மற்றும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை போன்றவையே இந்த நிறுவனத்தின் முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றன.
இந்த மாற்றம்.. அது நல்லதுதானே?
தமிழ்நாடு விரிவாக்கம் குறித்து ரீகல் ஜுவல்லர்ஸின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான விபின் சிவதாஸ் செய்தியாளர்கள்டம் பேசும்போது, "தங்க நகை வாங்குவது குறித்த கஸ்டமர்களின் பார்வையை மாற்றுவதற்காகவே, ரீகல் ஜுவல்லர்ஸ் தமிழ்நாட்டுக்கு வருகிறது. மேனுஃபேக்சரர் மற்றும் ஹோல்சேலர் ஆகியோர்களிடமிருந்து நேரடியாக நகைகளை வாங்குவதுதான் வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள ஒரு மாற்றம் என்று நாங்கள் நம்புகிறோம். அதுதான் எங்களுடைய விளம்பர வரியான, 'இந்த மாற்றம்... அது நல்லதுதானே?" என்பதைப் பிரதிபலிக்கிறது.
ஹோல்சேல் ரேட்டில் தங்கம்
சென்னை மற்றும் புதுச்சேரி ஆகியவை தமிழ்நாட்டிற்கான எங்களுடைய திட்டத்தின் தொடக்கம் மட்டுமே. மேனுஃபேக்சரர் மற்றும் ஹோல்சேலர் ஆகியோர்களிடமிருந்து நேரடியாக நகைகளை வாங்குவதன் நன்மைகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
அதேபோல, நிறுவனத்தின் சேர்மன் சிவதாசன் தாமரசேரி மற்றும் நிர்வாக இயக்குநர் பல்லவி நாம்தேவ் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "தமிழ்நாட்டு மக்களுடன் நீடித்த உறவுகளை உருவாக்க ஆவலுடன் இருக்கிறோம்.. பெண்களுக்கு அதிகாரமளிக்கும், குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும், சமூகங்களை வலுப்படுத்தும் அர்த்தமுள்ள முயற்சிகளை மேற்கொள்வோம்..
2000 பேருக்கு வேலைவாய்ப்பு
இந்த விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக, ரீடெயில் விற்பனை, வாடிக்கையாளர் சேவை, ஷோரூம் ஆபரேஷன்ஸ், லாஜிஸ்டிக்ஸ், நிர்வாகம் மற்றும் பிற துணைப் பிரிவுகளில் வரும் ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க ரீகல் ஜுவல்லர்ஸ் திட்டமிட்டுள்ளது" என்றார்..
சென்னையில் ஜூலை 31-ல் திறக்கப்படும் இந்த முதல் ஷோரூமைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும், பிறகு தமிழ்நாடு முழுவதிலும் பல கிளைகளை அமைக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. எது எப்படியோ, வரும் ஆண்டுகளில் 2,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்க ரீகல் ஜுவல்லர்ஸ் திட்டமிட்டுள்ள தகவல் மிகுந்த மகிழ்ச்சியை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது...!!


Click it and Unblock the Notifications
