யாருக்கும் கிடையாது.. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்து வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடி
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக மோதிக்கொண்ட நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
Recommended Video
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பொதுக்குழுவை புறக்கணித்து அதிமுகவின் ஓபிஎஸ் இன்று கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

ஆதரவாளர்கள் மோதல்
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்களும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதிமுக ஆதரவாளர்களின் வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

144 தடை உத்தரவு
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஓபிஎஸ் மீது அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் ஓபிஎஸ் வாகனத்தில் பண்டல் பண்டலாக ஏற்றப்பட்டது.

வருவாய்த்துறை ஆலோசனை
இதனைத் தொடர்ந்து, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்தும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் காவல் இணை ஆணையர், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனையில், அதிமுக அலுவலகத்திற்கு தற்காலிகமாக சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து தாசில்தார்களுடன் ஆலோசனை மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி, காவல் துறையினருடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

ஓபிஎஸ் போராட்டம்
பின்னர் தலைமை அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ்-யிடம் சீல் வைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் சாய்வர்தினி விளக்கமளித்தார். அதிமுகவினரிடயே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்கவும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை தடுக்கவும் சீல் வைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதேபோல் ஓபிஎஸ் விரைந்து வெளியேற வேண்டும் என்றும் காவல் துறையினர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் திடீரென தரையில் அமர்ந்து சில நிமிடங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதிமுக அலுவலகத்திற்கு சீல்
தொடர்ந்து அதிமுக அலுவலகத்தின் பொதுச்செயலாளர் அறைக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதன்பின், அங்கிருந்து ஓபிஎஸ் வெளியேறினார். இதன்பின், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக அலுவலகத்தில் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த இடத்தில் யாரும் சட்ட விரோதமாக கூடக் கூடாது. மீறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதன் பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தின் வெளிக் கதவிற்கும் சீல் வைக்கப்பட்டது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
சனிக்கிழமை தோறும் ஆள்பிடிக்கும் விஜய்.. அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடும் டென்ஷன் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி!












Click it and Unblock the Notifications