சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேட்ச்.. பூமியை நோக்கி வந்த "ராட்சச" ராக்கெட்டை.. நடுவானில் கொக்கி போட்டு பிடித்த ஹெலிகாப்டர்.. செம!

Google Oneindia Tamil News

சென்னை: பூமியை நோக்கி வரும் ராக்கெட்டை தனியார் ஸ்பேஸ் நிறுவனம் ஒன்று ஹெலிகாப்டர் மூலம் கேட்ச் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச அளவில் தற்போது தனியார் ஸ்பேஸ் நிறுவனங்கள் புதிய சாதனைகளை நிகழ்த்த தொடங்கி உள்ளன. நாசா போன்ற அரசு நிறுவனங்கள் மனித மிஷன்களை நிறுத்திவிட்ட நிலையில் ஸ்பேஸ் எக்ஸ், விர்ஜின் கேலக்டிக், ப்ளூ ஆர்ஜின் போன்ற நிறுவனங்கள் மனிதர்களை ஸ்பேஸுக்கு கொண்டு செல்ல முயன்று வருகின்றன.

இதில் ஸ்பேஸ் எக்ஸ் கொஞ்சம் வித்தியாசமானது. ஏனென்றால் அவர்களின் பல்கான் வகை ராக்கெட்டுகள் முதல் ஸ்டேஜ் அப்படியே பூமிக்கு திரும்ப கூடியவை.

என்ன படத்துல வர்ற மாதிரியே நடக்குது.. பூமியை நோக்கி பாய்ந்து வரும் சிறு கோள்! நாசா எச்சரிக்கை!என்ன படத்துல வர்ற மாதிரியே நடக்குது.. பூமியை நோக்கி பாய்ந்து வரும் சிறு கோள்! நாசா எச்சரிக்கை!

 ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ்

இரண்டாவது ஸ்டேஜ் விண்ணுக்கு செல்ல தொடங்கியதும் அதன் முதல் ஸ்டேஜ் அப்படியே திரும்பி பூமிக்கு வந்து லேண்ட் ஆகும். இதனால் ஒவ்வொரு முறையும் முதல் ஸ்டேஜை உருவாக்க வேண்டிய அவசியம் கிடையாது. மற்ற பல ஸ்பேஸ் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்த மாதிரியான ராக்கெட்டுகளை உருவாக்க கஷ்டப்பட்டு வரும் நிலையில்தான் ஸ்பேஸ் எக்ஸ் இதை எளிதாக சாதித்துள்ளது. தற்போது ராக்கெட் லேப் என்ற அமெரிக்க நிறுவனம் இதே சாதனையை கொஞ்சம் வித்தியாசமாக செய்துள்ளது.

ராக்கெட்

ராக்கெட்

ராக்கெட் லேப் நிறுவனம் அமெரிக்காவிலும், நியூசிலாந்தில் அலுவலகங்களை கொண்டுள்ளது. 2006ல் இந்த நிறுவனம் பீட்டர் பெக் என்பவர் மூலம் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் பல தனியார் நிறுவனங்களுக்கு சாட்டிலைட்டுகளை அனுப்பி வருகிறது. விவசாயம், தொழில்நுட்பம் தொடங்கி பல விஷயங்களுக்காக இந்த நிறுவனம் தனியார் சாட்டிலைட்டுகளை பல முறை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது.

எப்படி வந்தது?

எப்படி வந்தது?

இந்த நிறுவனத்தின் "There And Back Again" என்ற மிஷன் மூலம் இதுவரை 34 சாட்டிலைட்டுகளை அந்த நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு மிஷன்களில் ராக்கெட்டின் முதல் ஸ்டேஜ் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி வந்தது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் போல எரிபொருளை பயன்படுத்தி பூமிக்கு வராமல், பாராஷூட் மூலம் இந்த முதல் ஸ்டேஜ் பூமிக்கு வரும்.

கடலில் விழுந்தது

கடலில் விழுந்தது

அது அப்படியே கடலில் விழும். இந்த நிலையில்தான் நேற்று அந்த நிறுவனம் அனுப்பிய எலக்ட்ரான் ராக்கெட்டை புதிய விதத்தில் பூமிக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்படி ராக்கெட் லேபின் எலக்ட்ரான் ராக்கெட் விண்ணுக்கு ஏவப்பட்ட பின் அதன் முதல் ஸ்டேஜ் இரண்டரை நிமிடத்தில் பிரிந்தது. அதன்பின் சில நொடிகளில் அது பாராசூட்டை திறந்து பூமியை நோக்கி வேகமாக வந்தது. இந்த முதல் ஸ்டேஜ் பெரிய 4 மாடி கட்டிடம் அளவிற்கு உயரம் கொண்டு இருக்கும். அந்த நேரத்தில் சரியாக இன்னொரு பக்கம் ராக்கெட் லேப் நிறுவனத்தின் Sikorsky S-92 ஹெலிகாப்டர் வானத்தில் பறந்து கொண்டு இருந்தது.

பாராசூட்

பாராசூட்

பாராசூட் திறக்கப்பட்டதால் அந்த ராக்கெட் 36 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டு இருந்தது. பூமியில் இருந்து 4 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும் போது ஹெலிகாப்டர் அந்த ராக்கெட்டிற்கு அருகே சென்றது. அப்போது ராக்கெட்டின் பாராசூட் மீது இந்த ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கொக்கி ஒன்று வீசப்பட்டு, பாராசூட் அப்படியே கப்பென்று பிடிக்கப்பட்டது. சிக்ஸ் லைனில் அருகே பறக்கும் பந்தை ஜடேஜா எப்படி பிடிப்பார் அப்படி ராக்கெட்டின் பாராசூட்டை ஹெலிகாப்டர் கொக்கி போட்டு பிடித்தது.

Recommended Video

    சரி! Russia வேண்டாம்! அப்படின்னா.. | Pinaka Rocket | Pakistan Missile Test | Oneindia Tamil
    நிஜத்தில் நடந்தது

    நிஜத்தில் நடந்தது


    படங்களில் மட்டும் வர கூடிய விஷயங்களை நேற்று ராக்கெட் லேப் நிஜத்தில் செய்து காட்டியது. துப்பாக்கி குண்டு போல வேகமாக பூமியை நோக்கி வந்த ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் கொக்கி போட்டு பிடித்துள்ளனர். ராக்கெட் லேப் நிறுவனத்தின் இந்த எலக்ட்ரான் ராக்கெட்டின் முதல் ஸ்டேஜ் மீண்டும் ஆய்வகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, அடுத்த கட்ட ஆபரேஷனுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. ராக்கெட் லேப் நிறுவனத்தின் இந்த சாதனை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

    English summary
    Rocket Lab rocket caught by a flying helicopter in the sky. பூமியை நோக்கி வரும் ராக்கெட்டை தனியார் ஸ்பேஸ் நிறுவனம் ஒன்று ஹெலிகாப்டர் மூலம் கேட்ச் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X