நிவர் புயல் சேதம் சீரமைப்பு.. ரூ.74.24 கோடி ஒதுக்கிய தமிழக அரசு
சென்னை: நிவர் புயல் சேதத்தை சீரமைக்க முதல்கட்டமாக ரூ.74.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
புயலால் சேதமடைந்த வீடுகள், பயிர்கள் உள்ளிட்டவற்றுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய குழு சமீபத்தில் புயலால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டது. மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு பற்றி அந்த குழு இனிதான் பரிந்துரை அளிக்கும். இந்த நிலையில், தமிழக அரசு முதல்கட்டமாக இன்று ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
மின் கம்பங்கள், நீர் நிலைகள், சாலைகள், கட்டிடங்கள், விவசாய பயிர்கள் உள்ளிட்ட சேதங்களை சீரமைக்க முதல்கட்டமாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.