• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்.. இப்படி, "ஹிட் விக்கெட்" ஆகிட்டீங்களே சச்சின்!

Google Oneindia Tamil News

சென்னை: அது ஒரு காலம்.. ரொம்ப காலம் கூட இல்லை. 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை என்று வைத்துக் கொள்வோமே.. "சச்சிஇஇன்.. சச்சின்.. சச்சிஇஇன்.. சச்சின்.." என்ற கோஷம் ஒட்டுமொத்த ஸ்டேடியத்தின் ஒரே குரலாக எழுந்து எதிரணியின் இதயத்தில் சிம்மத்தின் கர்ஜனையை போல எதிரொலிக்கும்.

  ட்ரெண்டிங்கில் #IndiaTogether … விவசாயிகளுக்கு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு!

  டிவியில் கிரிக்கெட் பார்க்கும் கோடிக் கணக்கான ரசிகர்களின் வாய்களிலும் வயது வித்தியாசமில்லாமல் இந்த வார்த்தை வந்து விழும். சச்சின், பவுண்டரியோ, சிக்சரோ விளாசும்போது, மொத்த இந்தியாவும் ஒரே நேரத்தில் ஆரவாரிக்கும்.

  இந்தியா கண்ட வெகு சில, மிகச் சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே கிடைத்த கவுரவம் இது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 7 வருடங்களுக்கு பிறகும் இப்போது ஒட்டு மொத்த இந்தியாவும் சச்சின் என்ற பெயரை உச்சரிக்கிறது. திரும்ப திரும்ப உச்சரிக்கிறது. சமூக வலைத்தளங்களில் பேசுகிறது.
  ஆனால் பழைய உணர்வுப்பூர்வ ஆரவாரத்தோடு அல்ல..! "வேண்டாம்.. சச்சின்.. வேண்டாம்" என்ற கோப கோஷத்தோடு!!

  விவசாயிகளுக்கு எதிரான ஒடுக்குமுறை

  விவசாயிகளுக்கு எதிரான ஒடுக்குமுறை

  மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை, எதிர்த்து விவசாயிகள் போராடுகிறார்கள். அது ஆகிவிட்டது இரண்டரை மாதங்கள். ஆனால், அவர்கள் பயன்படுத்தும் சாலையில் ஆணி நடப்பட்டது, சுவர் எழுப்பப்பட்டது. டெல்லியின் புற நகரில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. எனவேதான் ரிஹானா, மீனா ஹாரிஸ் என உலகின் பல பிரபலங்களும் இதைப் பற்றி பேசத் தொடங்கினர். எனவே விவசாயிகள் விஷயத்தில் மத்திய அரசு ஏதாவது சுமூக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை துளிர்க்க துவங்கியது. ஆனால், திடீரென சச்சின் டெண்டுல்கர் போட்ட ஒற்றை ட்வீட் மொத்த சூழ்நிலையை மாற்றிவிட்டது. விவசாயிகள் பிரச்சினை இப்போது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான சவால் போல மாற்றப்பட்டுவிட்டது.

  இறையாண்மை

  இறையாண்மை

  சச்சின் டெண்டுல்கர் நேற்று இரவு வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளியிலுள்ள சக்திகள், பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர, பங்கேற்பாளராக இருக்க முடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவை பற்றி தெரியும். இந்தியாவுக்கான முடிவை இந்தியர்கள் எடுப்பார்கள். ஒரு நாடாக, நாம் இணைந்திருப்போம். இவ்வாறு சச்சின் தனது ட்வீட்டில் தெரிவித்தார்.

  ரசிகர்கள் கோபம்

  ரசிகர்கள் கோபம்

  இந்த டுவிட்டர் பதிவு பெரும் புயலையே கிளப்பிவிட்டது. ஹேட்டர்ஸ்சே இல்லாத கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை வைத்திருந்த சச்சின், ஒரே நாளில் பெரும்பாலான விவசாயிகளின், மற்றும் அவரது ரசிகர்களில் கணிசமானோரின் கோபத்தையும் ஒரே நேரத்தில் சம்பாதித்துவிட்டார். ஒரு ட்வீட் எப்படி இந்தியாவின் இறையாண்மையை பாதித்து விடும்.. மத்திய அரசுக்கும்-விவசாயிகளுக்குமான ஒரு பிரச்சினையை, நாட்டுக்கே எதிரான பிரச்சினை என்பதை போல மாற்றிவிட்டாரே சச்சின் என அவரது தீவிர ரசிகர்களே ஆதங்கப்படுகிறார்கள்.

  ஏற்கனவே பேசவில்லை

  ஏற்கனவே பேசவில்லை

  சச்சின் விவசாயிகளுக்கு ஆதரவாகவோ, அல்லது குறைந்த பட்சம் விவசாயிகளின் பிரச்சினையையோ ட்வீட்டாக போட்டிருந்து, இப்போது இப்படிச் சொன்னால் கூட பரவாயில்லை. நாட்டுக்காக பேசிவிட்டார் என கடந்து போயிருப்பார்கள். ஆனால், சச்சினை கடைசியாக குடியரசு தின வாழ்த்தோடு டுவிட்டரில் பார்த்தது. பிறகு இப்போது இப்படி ஒரு ட்வீட்டோடு வந்துள்ளதுதான், ரசிகர்களின் கோபத்திற்கு காரணம்.

  சச்சின் போட்ட ஆரம்பம்

  சச்சின் போட்ட ஆரம்பம்

  சச்சின் போட்ட இந்த ட்வீட்டுக்கு பிறகு வரிசையாக பல ஹாலிவுட் பிரபலங்களும், விராட் கோலி, ரோஹித் உட்பட பல கிரிக்கெட் வீரர்களும் இதே போன்ற கருத்தோடு ட்வீட்டை வரிசையாக வெளியிட்டனர். ஆனால் சச்சின் பெயர்தான் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வறுபடுகிறது. காரணம்.. "விதை" சச்சின் போட்டது.

  மீம்ஸ் தெறிக்கிறது

  மீம்ஸ் தெறிக்கிறது

  சச்சின் ~ இன்னிங்கஸ்ல ஓபனிங் இறங்கினா லாஸ்ட் வர நின்னு ஸ்கோர் பண்ற மாதிரி, டீவீட்டும் "முத ஆளா போட்டா ஸ்கோர் பண்ணலாம் காட்"ன்னு ஒருத்தன் சொன்னத நம்பி ட்வீட் போட்டேன்.. என்ன கோவத்துல இருந்தாங்களோ.. என்ற டயலாக்கை வைத்து உலவும் மீம்ஸ்.

  ஸ்கோரை விட சோறு முக்கியம்

  ஸ்கோரை விட சோறு முக்கியம்

  நமக்கு சச்சின் கோலி என்ற ஸ்கோரை விட விவசாயி என்னும் சோறே சிறந்தது ❤❤❤

  சச்சின், ரெய்னா

  சச்சின், ரெய்னா

  சச்சின், ரெய்னா : இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்.

  கோலி, ரோஹித் : மீன்கள் விற்கப்படும்.

  ஹர்திக் : விற்கப்படும்.

  அதாவது சச்சின் விரிவாக ட்வீட் போட்ட பிறகு, கோலி, ரோஹித் அதைவிட சிம்பிளாகவும், ஹர்திக் ரொம்பவே சிம்பிளாக இந்தியர்களே ஒன்றுபடுவோம் என்ற வார்த்தையை மட்டும் போட்டதையும் வைத்து கலாய்க்கிறது இந்த மீம்.

  சச்சின் ஹிட் விக்கெட்

  சச்சின் ஹிட் விக்கெட்

  இதுவரை ஒரு நாள் போட்டிகளில் ஒரே ஒருமுறைதான் ஹிட் விக்கெட் ஆகியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். அதாவது, தனக்கு தானே ஸ்டெம்பில் அடித்துக் கொண்டு அவுட்டானது ஒரு முறைதான். ஆனால், அந்த பெருமை முடிவுக்கு வந்துவிட்டது. ஏனெனில், இந்த ட்வீட், அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த இரண்டாவது 'ஹிட் விக்கெட்'!

  English summary
  Sachin Tendulkar troll memes goes viral after he tweeted on farmers protest.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X