'அரசு இயந்திரம் தூங்குகிறது.. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை'.. கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை!
சென்னை: கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவதாகவும், அரசு இதனை வேடிக்கை பார்ப்பதாகவும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக எண்ண எண்ண பெருகும் வருத்தம் என்ற தலைப்பில் கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்துவருவதை பத்திரிக்கை அம்பலப்படுத்தி வருகின்றன.

ஐம்பதாண்டுகளாகத் தமிழகத்தில் நிகழ்வதுதானே, இதில் என்ன ஆச்சர்யம்? இந்த மணல் கொள்ளை நடப்பது தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில். நாற்புறமும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதியில். ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சாலையின் வழியாக லாரி லாரியாக மணல் அள்ளப்பட்டு வந்துள்ளது. பொதுப்பணித்துறை சிறப்பான முறையில் வேடிக்கை பார்த்துள்ளது.
மிக மிக குறைந்தபட்ச மதிப்பு வைத்து கணக்கிட்டாலும் நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மணல் ஏப்பம் விடப்பட்டுள்ளது. வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பு. இவையெல்லாவற்றையும் விட பெரும்கொடுமை என்னவென்றால், இந்த மணல் கட்டுமானத்திற்கு உகந்தது அல்ல. இம்மணலைக் கொண்டு கட்டடம் கட்டினால் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என்கிறார்கள் கட்டுமான நிபுணர்கள்.
அப்படியெனில், இந்த மணலை அள்ளி கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றைப் பயன்படுத்தப் போவது யார்? அதில் வாழப் போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? கூவம் கடலுடன் இணையும் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் சூழியல் மிக மோசமாக அழிந்துவருகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறார்கள்.
அனுமதி இல்லாமல் திருடுகிறார்களே என்று வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா?
அரசு இயந்திரம் உறங்கிக்கொண்டிருக்கிறதே என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடர்கிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்படப் போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா? இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விவசாயிகளின் பாசனத்திற்கும், மக்களின் குடிநீர் தேவைக்கும் பிரதானமாக விளங்கும் காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட முக்கிய ஆறுகளிலும், ஏரி, குளங்களிலும் மணல் திருட்டு படுஜோராக நடந்து வருவதாக கூறப்படுகிறது. மணல் திருட்டு தொடர்பாக சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் புகார் கொடுத்தால் போலீசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மணலை திருடும் கும்பலுக்கு போலீசாரே துணை போவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆறு, ஏரி மற்றும் குளங்களில் மணல் திருட்டு நடப்பதை தடுக்க செல்லும் ஆர்.டி.ஓ, வி.ஏ.ஓ உள்ளிட்ட அரசு அதிகாரிகளையும் மணல் கடத்தும் கும்பல் வாகனங்களை மோதச் செய்து கொலை செய்து விடும் செயல்களும் அடிக்கடி நடந்து வருகிறது. மணல் திருட்டு என்பது நம்மை மட்டுமல்ல, எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஆற்றுபடுகையில் மணல் ஒரு ஸ்பான்ஞை போல பணி செய்கிறது. மழை காலங்களில் தண்ணீரை உறிஞ்சி வைத்து மற்ற நாட்களில் நிலத்தடி நீரின் ஆழம் அதிகரிக்காமல் பார்த்து கொள்கிறது. இதில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டினால் இந்த வாய்ப்பு நீக்கப்படுவதால் பெரும்பாலான நீர் ஓடி கடலில் கலந்து விடுகிறது. இதன் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கோடைகாலங்களில் வறட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications