ரேடியல் சாலையில் லெஜண்ட் சரவணா பிரம்மாண்ட முடிவு.. 15 லட்சம் சதுர அடியில் சென்னையின் பெரிய ஸ்டோர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மிகப்பரிய அசுர வளர்ச்சி அடைந்து வரும் ஒரு சாலை என்றால் அது ரேடியல் சாலை தான். விமானம் நிலையம் மற்றும் ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் இதுதான் தென் சென்னையின் வணிக மையமாக உருவெடுத்து வருகிறது. பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையான இந்த சாலையில், 15 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான வணிக வளாகம் ஒன்றை அமைக்க சரவணன் அருள் தலைமையிலான லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் திட்டமிட்டுள்ளது; இது சென்னையின் மிகப்பெரிய ஒற்றை வணிக விற்பனை நிலையமாக அமையக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் குரோம்பேட்டை பல்லாவரத்தில் தொடங்கும் ரேடியல் சாலை 10 கிமீ தூரம் பயணித்து ஓஎம்ஆர் சாலையில் துரைப்பாக்கம் பகுதியில் முடிகிறது. இந்த சாலையில் 5 கிமீக்கு பள்ளிக்கரணை ஏரி தான் உள்ளது. அதன்பிறகு காமாட்சி மருத்துவமனை தொடங்கி ஜமீன் பல்லாவரம் வரை சுமார்7 கிமீ தூரத்தில் சாலையில் இருபுறமும் வானுயர்ந்த கட்டிடஙகள், அடுக்குமாடிகள் அதிகரித்து வருகின்றன. இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

Saravana Stores is planning a 15-lakh sq ft retail complex on Pallavaram Thoraipakkam Radial Road

குரோம்பேட்டை பல்லாவரம் வேளச்சேரி, கீழ்கட்டளை, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் என பல பகுதிகளை இணைக்கும் இந்த சாலை 200 அடி அகலம் கொண்டது. எனவே இங்கு வணிக நிறுவனங்கள், தங்களது கிளைளை ஆரம்பிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றன. ஏற்கனவே காவேரி மருத்துவமனை இங்கு கிளையை தொடங்கி உள்ளது. சரவணா செல்வரத்தினம் ஜவுளி கடை இங்கு உள்ளது. ஐடி நிறுவனங்களும், அடுக்குமாடிகளும் அதிக அளவில் உள்ளன.

இந்த சூழலில் 15 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான வணிக வளாகம் ஒன்றை அமைக்க லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் திட்டமிட்டுள்ளது. சதுர அடிக்கு ரூ.10,000 என்ற விலையில், சுமார் ரூ.1,500 கோடி மதிப்புள்ள இந்தத் திட்டம், ரூ.2,500 கோடி மதிப்பிலான லெஜண்ட் குழுமத்தின் நான்காவது விற்பனை நிலையமாக அமையும். இந்த மெகா ஸ்டோரில், நகைகள், மரச்சாமான்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் மின்னணுப் பொருட்களை ஒரே இடத்தில் விற்கும் இடமாக இருக்க போகிறது. இதுதான் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் பெரிய அளவிலான, மதிப்பு சார்ந்த சில்லறை விற்பனை நிலையமாக இருக்க போகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் மலிவான விலையில் வாங்கப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு, ரேடியல் சாலை ஒரு முக்கிய வணிகப் பகுதியாக உருவெடுத்துள்ளதால் மிகப்பெரிய அளவில் நிலத்தின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தக் குழுமம் தற்போது டி நகர் (1.5 லட்சம் சதுர அடி), பாடி (3.7 லட்சம் சதுர அடி) மற்றும் அண்ணா நகருக்கு அருகிலுள்ள பார்க் ரோடு (1.3 லட்சம் சதுர அடி) ஆகிய இடங்களில் கடைகளை நடத்தி வருகிறது. தற்போது 15 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரேடியல் சாலையில் கடையை லெஜெண்ட் சரவணா ஆரம்பித்தால், இதுதான் சரவணா ஸ்டோர் கடைகளிலேயே பெரியதாக இருக்கும். அது மட்டுமல்ல சென்னையின் மிகப்பெரிய வணிக மையமாக ரேடியல் சாலையில் அமையும் லெஜெண்ட் சரவணா ஸ்டோர் இருக்கும்.

இதுபற்றி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள று இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி குமார் ராஜகோபாலன், சென்னை ஒரு பன்முக கலாச்சார மாநகரமாக மாறி வருகிறது.எனவே இது மாநித்தின் பல்வேறு இடங்களிலிருந்து மட்டுமல்லாமல், தேசிய அளவிலான இடங்களிலிருந்தும் வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. முன்னணி நிறுவனங்கள் மால்களை அமைத்து வருகின்றன. மேலும், சில்லறை விற்பனைக் கடைகளில் பொழுதுபோக்கு வசதிகள் கிடைப்பது ஒரு குறிப்பிடத்தக்க போக்காக உள்ளது.

மேலும், ஆன்லைன் ஷாப்பிங் யுகத்தில், மக்கள் தங்களின் 'வெளியே செல்லும்' தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, பொருட்களை வாங்குவதை விட பொழுதுபோக்கையே அதிகம் சார்ந்துள்ளார்கள். திரைப்படங்கள் பார்க்கும் கலாச்சாரத்தால் உந்தப்பட்டு, இந்தப் போக்கு தெற்கில் அதிகமாகக் காணப்படுகிறது.

சர்வதேச அளவில் அழுத்தம் இருந்தபோதிலும், தென்மாநிலங்களில், குறிப்பாக சென்னையில், நவீன சில்லறை விற்பனையாளர்கள் 9% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. எனவே சில்லறை விற்பனையாளர்களிடையே மிகுந்த நம்பிக்கை நிலவுவகிறது. சில்லறை விற்பனையாளர்கள் மிகப்பெரிய விரிவாக்கங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் உருவாகி வருகிறது. சேவைத் துறை வளர்ச்சி கண்டு வருகிறது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் செயல்பாடுகளும் தெளிவாகத் தெரிகிறது. இவை தான் சில்லறை விற்பனை வளர்ச்சியைத் தூண்டுகிறது" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+