பள்ளிக்கரணை டூ சோழிங்கநல்லூர்.. 5 கிமீக்கு 1 மணி நேரம்.. CM சார், தமிழச்சி தங்கபாண்டியனுக்கு நன்றி
சென்னை: பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வழி என்பது இரு வழியிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் நெரிசல் மிகமிக அதிகமாக இருக்கிறது. குறுகிய சாலை, அதிகமான ஆக்கிரமிப்பு, மிக அதிகமான வாகன நெருக்கம் போன்ற காரணங்களால் நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் சாலையின் நிலையும் சில பகுதிகளில் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் செல்ல நீண்ட நேரம் ஆகிறது. இந்த விவகாரத்தில் ஐடி பணியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் மிகவும் பணக்கார தொகுதி என்றால் அது சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி தான்.. ஏனெனில் இந்த தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டின் பெரிய ஐடி நிறுவனங்கள் நிறைந்தவை ஆகும். மிகவும் அதிகப்படியான வளர்ச்சி அடைந்த இந்த பகுதிக்கு செல்ல இரு வழிகளில் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஓஎம்ஆர் சாலை, பள்ளிக்கரணை மேடவாக்கம் வழியாக செல்லும் சாலை என இரு வழிகள் உள்ளன. இதில் பலர் பள்ளிக்கரணை மேடவாக்கம் வழியாக செல்லும் சாலையை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த சாலை கடும் நெரிசல் உள்ள சாலையாக இருக்கிறது..

ஏனெனில் தாம்பரம், வழியாக வருபவர்களும், குரோம்பேட்டை வழியாக வருபவர்களும், கிண்டி வழியாக வருபவர்களும், வேளச்சேரி வழியாக வருபவர்களும் சோழிங்கநல்லூர் செல்ல பள்ளிக்கரணை வழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதேபோல் சோழிங்கநல்லூர் இருந்து பல்வேறு பகுதிக்கு செல்ல பள்ளிக்கரணை வழியைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பள்ளிக்கரணையில் சாலைகள் மிகக் குறுகியதாக இருக்கிறது.
இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் ஒரு பக்கம் சென்றாலும் நெரிசல் ஏற்படும் நிலையில் சாலை உள்ளது. கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை குறுகியதாக இருக்கிறது. இதனால் பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வழியை பொறுத்தவரை எப்போதும் நெரிசல் மிகுந்ததாக இருக்கிறது. இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் எனறும், பள்ளம் மிகுந்த சாலையை மாற்றி தரமான சாலை அமைக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இந்த சூழலில் நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், அலுவலகத்தை சரியான நேரத்தில் அடைய உதவியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி.. இன்று பள்ளிக்கரணையில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 5 கி.மீ தூரத்தை அடைய 1 மணி நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே ஆனது.
உலகத்தரம் வாய்ந்த சாலையாகவும், பள்ளங்கள் இல்லாத அழகான சாலையாகவும் இருந்தது என்பது நல்ல விஷயம். மீண்டும் ஒருமுறை மிக்க நன்றி. தென் சென்னை எம்.பி.க்கு (தமிழச்சி தங்கப்பாண்டியன்) சிறப்பு நன்றி" இவ்வாறு கிண்டலாக கூறியுள்ளார். அதாவது சாலை மிக மோசமாக உள்ளதாகவும், சாலையை சரியாக அமைக்காத காரணத்தால் நீண்ட நேரம் நெரிசலில் மாட்டியதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் கூறுகையில், மேடவாக்கத்திலிருந்து பள்ளிக்கரணை வழியாக துரைப்பாக்கத்திற்கு செல்லும் பாதை மோசமாக இருக்கிறது. குண்டு குழிகள் நிறைந்தவை. கடந்த ஆண்டு மழை காலத்திற்குப் பிறகு சாலைகள் அமைக்கப்படவில்லை. பருவமழை இப்போதுதான் தொடங்கியிருப்பதால் கடினமான காலங்கள் வர இருக்கிறது. அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். அதேபோல் பல நெட்டிசன்கள் பள்ளிக்கரணையில் சாலை வசதி தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், தயவு தாட்சணை இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற தரமான சாலை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications