'எதார்த்தமாக' சொல்வேன்.. எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை.. சசிகலா விளக்கம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை கூறியிதாக பேசியிருந்த சசிகலா அது தொடர்பாக தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தாம் ஆலோசனைகளை கூறியிருப்பதாகவும் எம்.ஜி.ஆர் என்னிடம் கட்சி தொடர்பான கருத்துகளை கேட்டதும் வெளி உலகத்துக்கு தெரியாதது என்றும் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் சசிகலா பேசும் ஆடியோ அதிமுக வட்டாரத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா தொலைபேசியில் பேசிய ஆடியோ இப்போது வெளியாகி உள்ளது. இந்த ஆடியோவில் சசிகலா பேசியிருக்கும் கருத்துகள் எம்ஜிஆரை மையப்படுத்தி இருந்தது, இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது,

எம்.ஜி.ஆர். கேட்பார்
சசிகலா அப்படி என்ன பேசினார். சசிகலா அந்த ஆடியோவில் கூறும் போது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நான் ஆலோசனைகள் கூறி இருக்கிறேன்; அதிமுக தொடர்பாக என்னிடம் எம்.ஜி.ஆர். கருத்துகளை கேட்பார். நான் சொல்லும் கருத்துகளை எம்.ஜி.ஆர். பொறுமையாக கேட்பார். நான் இளம் வயதிலேயே அரசியல் முதிர்ச்சியுடன் செயல்பட்டேன். அதனால்தான் என்னுடைய ஆலோசனையை எம்.ஜிஆர். கேட்டார்.

ஜெ.. ஜானகி அணிகள் சேர்ப்பு
எம்.ஜி.ஆர் பேசும்போது எப்படி எல்லாம் பேசினால் நன்றாக இருக்கும் என அறிவுரை வழங்கி இருக்கிறேன். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக ஜா. அணி, ஜெ. அணி என பிளவுபட்டது. அப்போது இரு அணிகளையும் ஒன்றாக இணைத்ததும் நான்தான்.. என சசிகலா அந்த உரையாடலில் குறிப்பிட்டிருந்தார்.

காதில் பூ சுற்றுகிறார்
இந்த உரையாடல் குறித்து கிண்டல் செய்த அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் எம்ஜிஆருக்கே ஆலோசனை சொல்லியதாக சசிகலா கூறியது காதில் பூ சுற்றுகிற விஷயம். எம்ஜிஆர் அறிவும், ஆற்றலும் , ஆளுமைத் திறமையும் புத்திக்கூர்மையும் உள்ளவர். அவருக்கு இவர் ஆலோசனை சொல்லியதாக சொன்னால் இதை விட ஒரு நகைச்சுவை உலகில் வேறு இருக்காது. அவர் இதுவரை வீசிய அஸ்திரங்கள் பயனற்று போனதால் சசிகலா இந்தளவு வந்திருக்கிறார். கொஞ்சம் விட்டால் அண்ணாவுக்கே ஆலோசனை சொன்னதாக கூட சொல்வார்.

முற்றிலும் பொய்யானது
கேட்பவர்கள் கேட்டால் கேப்பையில் நெய் வடிகிறது என்பதை போன்று தமிழகத்து மக்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கட்சி எடுத்த முடிவில் அனைவரும் உறுதியாக உள்ளோம். கட்சிக்கும் சசிகலாவுக்கும் எந்தவிதமாக சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் உயிருடன் இல்லை. இல்லாத தலைவர்களுக்கு நான் ஆலோசனை சொன்னதாக சொன்னால் நிச்சயமாக நகைப்புதான் வருகிறது. சோதனைகளை தாங்கி சரித்திரம் படைத்த இயக்கம் இது. இந்த இயக்கத்தை யாரும் அழிக்கவும் முடியாது, யாராலும் கைப்பற்றவும் முடியாது" என்றார்.அதிமுகவினர் பலரும் சசிகலா பேச்சை கண்டித்தனர்.

எதார்த்தமாக சொல்வேன்
சசிகலாவின் பேச்சு சர்ச்சையான நிலையில் அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். தொண்டராக வெளியில் நடக்கும் விவகாரங்களை 'எதார்த்தமாக' எம்.ஜி.ஆரிடமும் சொல்வேன். அந்த அர்த்தத்தில் தான் எம்.ஜி.ஆர் என்னிடம் கருத்தையும் கேட்பார் என நான் கூறினேன் என்று கூறியுள்ளார் சசிகலா.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications