சைலன்ட் ஆலோசனை.. டிடிவி வீட்டு திருமணத்தில் எதிரொலித்த கேசி வீரமணி ரெய்டு.. சட்டென சீறிய சசிகலா?!
சென்னை: சரியாக நேற்று டிடிவி தினகரன் வீட்டு திருமணம் நடந்த அதே நேரத்தில்தான் இன்னோர் பக்கம் முன்னாள் அதிமுக அமைச்சர் கேசி வீரமணி வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. இந்த திருமணத்திற்கு வந்திருந்த சசிகலாவும், சில அதிமுக, அமமுக நிர்வாகிகளும் ரெய்டு குறித்து சில நிமிடங்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
Recommended Video
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இரவு வரை நடத்தப்பட்ட சோதனையில் 34 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு 4.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 1.8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் நோட்டுகள் கண்டறியப்பட்டது.
இதில் வழக்கிற்கு தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 654% சொத்துக்களை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சேர்த்து உள்ளதாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேரம் பார்த்து ரெய்டு?
நேற்று ரெய்டு நடந்த அதே நேரத்தில் இன்னொரு பக்கம் திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் டிடிவி தினகரன் மகள் திருமணம் நடந்தது. டிடிவி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி துளசி வாண்டையார் பேரன் ராமநாதன் துளசி வாண்டையாருக்கும் இடையில் திருமணம் நடைபெற்றது. பல அமமுக நிர்வாகிகளும், சில அதிமுக நிர்வாகிகளும், சில பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவிற்கு பின் சசிகலா ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக பேசிக்கொண்டு இருந்தார்.

பேச்சு அடிப்பட்டு உள்ளது
இந்த நிலையில்தான் கேசி வீரமணி வீட்டில் நடந்து கொண்டு இருந்த ரெய்டு குறித்தும் இதில் பேசப்பட்டு இருக்கிறது. கேசி வீரமணி வீட்டு ரெய்டு என்று இல்லாமல் மொத்தமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி உட்பட பலரின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகள் குறித்து ஆலோசனை நடந்துள்ளது. வரிசையாக பலர் ரெய்டில் சிக்குவதை பற்றி பேசி உள்ளதாக தெரிகிறது. அதிலும் அதிமுக தரப்பு இந்த ரெய்டுகளுக்கு எதிராக பெரிதாக எதுவும் செய்யவில்லை என்று சசிகலா கவலைப்பட்டதாக கூறப்படுகிறது.

சீறிய சசிகலா
வரிசையாக ரெய்டு நடக்கிறது.. ஆனால் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள். இப்படி இருந்தால் திமுகவின் நடவடிக்கை தொடரத்தான் செய்யும் என்று சசிகலா இதில் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. சசிகலா வந்தால் ஓரளவு ஒன்றாக இருந்து ரெய்டுகளை, வழக்குகளை எதிர்கொள்ளலாம் என்பதை போல இந்த குட்டி மீட்டிங்கில் அமமுகவினர் பேசியதாக தெரிகிறது. அதிலும் எடப்பாடி பழனிசாமி குறித்தும் இதில் பேசி இருக்கிறார்களாம்.

ஏன் எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிக்கு கோடநாடு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டால் அது ஒரு வகையில் அதிமுக தரப்பிற்கு இடியாக மாறும். அதிமுகவில் பிளவை ஏற்படுத்தும். நிர்வாகிகள் வெளியேறும் நிலையை ஏற்படுத்தும். அப்படி நடக்காமல் இருக்க சசிகலா மீண்டும் கட்சிக்குள் வருவதே சரியாக இருக்கும் என்பது போல அமமுக நிர்வாகிகள் மீட்டிங்கில் பேசி இருக்கிறார்களாம். இந்த ரெய்டுகள் வழக்குகளை பயன்படுத்திக்கொண்டு எப்படியாவது மீண்டும் அதிமுகவிற்குள் வர முடியும் என்று சசிகலா நம்புகிறாராம்.

பன்னீர்செல்வத்திற்கு பாராட்டு
எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யார் மீதும் சசிகலா பெரிய அதிருப்தியில் இல்லை என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனைவி மரணத்தில் ஓபிஎஸ்ஸை சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். இது இருவருக்கும் இடையில் கொஞ்சம் இணக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு முன்பே சசிகலா ஓ.பி.எஸ் குறித்து சக நிர்வாகிகளிடம் பாசிட்டிவாக பேசி இருக்கிறாராம். ஓ.பி.எஸ் மீது அவருக்கு கோபம் எதுவும் இல்லை, சசிகலா கட்சிக்குள் வருவதற்கு ஓ.பி.எஸ் தடை கிடையாது. இ.பி.எஸ்தான் இதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்பதால் சசிகலா கொஞ்சம் அவர் மீது கோபத்தில் உள்ளதாக தெரிகிறது.

தலையிட்டுக்கொள்ளவில்லை
நேற்று திருமணத்தின் போது நடந்த சின்ன மீட்டிங்கிலும் சசிகலா இதை பற்றி புலம்பி பேசியதாக தெரிகிறது. இந்த மீட்டிங்கில் தினகரன் பெரிய அளவில் தலையிட்டுக்கொள்ளவில்லை என்கிறார்கள். கல்யாண பிசியாக இருக்கலாம், அரசியல் பேசுவதற்கான நேரம், இடம் அதுவல்ல என்று நினைத்து இருக்கலாம். அல்லது அதிமுக விஷயத்தில் தலையிட விரும்பாமல் இருக்கலாம்.. ஏதோ ஒரு காரணத்திற்காக தினகரன் இந்த சந்திப்பில் பெரிதாக தலையிட்டுக்கொள்ளவில்லை. அடுத்தடுத்த ரெய்டுகள்.. வழக்குகள் தனக்கு அதிமுகவில் மீண்டும் வாயிலை திறக்கும் என்று சசிகலா நம்பிக்கையோடு காத்திருப்பதாகவே சமீபத்திய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
-
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
கூட்டணி தர்மம் காற்றில் பறக்குது.. தேமுதிக மட்டும்தான் இருக்கும்.. திமுகவை கழற்றிவிட்ட கூட்டணிகள்? -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது?












Click it and Unblock the Notifications